2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

இருக்குமிடங்களைக் காண்பிக்கும் செயல்திறனை மாற்றியது Pokemon Go

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

Pokemon Go செயலி எங்கிருக்கின்றது என காண்பிக்கும் செயற்பாட்டில், Pokemon Goவின் உருவாக்குநரான Niantic, குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தியமையையடுத்து, Pokemon Goவினை விளையாடுவோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Pokemon Go விளையாட்டின் பாத்திரங்கள் எங்கிருக்கின்றன என்று Pokemon Go விளையாடுவோருக்கு காண்பிக்கும் Pokevision போன்ற மூன்றாந்தரப்பு இணையத்தளங்களை Niantic முடக்கியமையையடுத்தே Pokemon Go விளையாடுவோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Pokemon Go விளையாடுவோர், வண்ணமயமான பாத்திரங்களை கண்டுபிடிப்பதற்கு, இருக்குமிடங்களை காண்பிக்கும் வசதி உதவுவதுடன், அந்தப் பாத்திரங்கள் இயங்குவதனையும் மட்டுப்படுத்துகிறது. இந்நிலையில், இருக்குமிடங்களைக் காண்பிக்கும் செயல்திறனை Niantic மாற்றியமையானது, Pokemon Go விளையாடுவோரில் பெரும்பான்மையானோரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.  

Pokemon Go விளையாடுபவரின் திறன்பேசியிலுள்ள பாத்திரங்களுக்கு மேலதிகமாக, அண்மையிலுள்ள வேறு பாத்திரங்களையும் காண்பிக்கும் வகையில் முன்னர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட வசதியானது எதிர்பார்த்தபடி இயங்காத நிலையில், தற்போது இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.

இது தவிர, Pokevision மற்றும் Pokeradar போன்ற இருக்குமிடங்களைக் காண்பிக்கும் உத்தியோகபூர்வமற்ற மூன்றாந்தரப்பு சேவைகளும், தமது செயல்திறன்களை மட்டுப்படுத்தியுள்ளன.

Pokeman Goவினுடைய தரவுகளைப் பயன்படுத்தி, நிகழ்காலத்திலேயே வரைபடங்களை உருவாக்கும் Pokevision, Pokeman Goஐ விளையாடுவோர், குறிப்பிட்ட பாத்திரங்களைக் கண்டுபிடிக்க உதவியிருந்தது.

இந்நிலையில், Pokevision தளமானது நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் உருவாக்குநர் டூவீட் ஒன்றில் தெரிவித்துள்ளது. தற்போதைய தருணத்தில் Niantic மற்றும் Nintendo விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதாக டூவீட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .