Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் இன்று முதல் Apple Pay ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனாவின் தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கியின் பிரதிநிதி ஒருவரே, பெப்ரவரி 18ஆம் திகதி Apple Pay சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக WeChatஇல் தெரிவித்துள்ளது.
இந்த Apple Pay சேவைக்காக, சீனாவின் மிகப்பெரிய கட்டணம் செலுத்தும் வலையமைப்பான Union Payயுடன் அப்பிள் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தவிர, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளைப் போன்று, Apple Pay சேவைக்காக சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் வங்கிகளுடன் அப்பிள் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ஏ.பி.சி, சி.சி.பி, சி.எம்.பி, ஐ.சி.பி.சி உள்ளிட்ட 19 வங்கிகளுடன் அப்பிள் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Apple Pay ஆனது ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஹொங் கொங், சிங்கப்பூர், ஸ்பெயினுலுள்ள American Express அட்டைகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளநிலையில், ஐக்கிய அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்ததாக சீனாவே, அப்பிளுக்கு மிகப்பெரிய சந்தையாகவுள்ளது. சீனாவில் மில்லியன் கணக்கானோர் iPhone 6, 6 Plus பாவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும், சீனாவில் ஏற்கெனவே பிரபலமாகியுள்ள இரண்டு கட்டணச் சேவைகளான Alibabaவின் AliPay, WeChat-இன் wallet உடன் Apple Pay போட்டியிடவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
5 hours ago