2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக ஒருவரிடம் தங்களின் மெயில் ஐடி கேட்டால். அவர்கள் தங்களது ஐடி முன்பகுதி சொன்ன பிறகு நிறுத்திவிடுவார்கள். 

காரணம் அனைவரது ஐடிக்கு பின்னால் வரும் சொல் @Gmail.com. இன்னால் வரை நாம் ஜிமெயில்லில் பழைய முறையை தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஜிமெயில் பலக்கட்டத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஜிமெயிலில் பல்வேறு சார்ட்கட் வசதிகள் உள்ளது. இதன்மூலம் ஜிமெயிலை நாம் எளிதாக பயன்படுத்த முடியும். ஜிமெயில்லின் சார்ட்கட் விவரங்கள் குறித்து பார்ப்போம். 

விண்டோஸ் மற்றும் மேக் முதலாவது இன்டர்நெட் சேவையை ஆன் செய்து கொள்ளவும். பின், தங்களது கூகுள் அக்கவுண்ட்டுக்குள் நுழைந்து கொள்ளவும். குறிப்பாக தங்களது கணினியில் உள்ள விண்டோஸ் மற்றும் மேக் வகைகளுக்கு மட்டும் இந்த சார்ட்கட் செல்லும். 

கணினியின் மூலம் ஜிமெயில் பயன்படுத்தும் போது, கீபோர்ட்டில் வழியாகவே அனைத்து செயல்பாட்டையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் நாம் ஒரு புது வகையான ஜிமெயில் அனுபவத்தை பெறமுடியும். 

செட்டிங்ஸ்ஸை கிளிக் செய்யவும் ஜிமெயில் அக்கவுண்ட்டை ஓபன் செய்து கொள்ளவும். அதன் மேல் உள்ள செட்டிங்ஸ் என்ற பட்டனை கிளிக் செய்யவும். கீபோர்ட் நோட்டிபிகேஷன் ஆன் செட்டிங்க்ஸ் என்ற பட்டனை கிளிக் செய்யும் போது. அதில் வரிசையாக தேவைகள் காண்பிக்கும். 

அதில், கிழே ஸ்க்ரால் செய்து பார்த்தால் கீபோர்ட் நோட்டிபிகேஷன் ஆன், ஆஃப் என்று காண்பிக்கும். அதை ஆன் செய்து கொள்ளவும். 

இதை ஆன் செய்தபிறகு, கூகுள் மெயில் ஐடியை உபயோகித்திற்கு செல்லவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சார்ட் கட்டை பயன்படுத்தி கூகுள் மெயில் ஐடியை எளிதாக பயன்படுத்தலாம். 

மெயில் ஐடிக்கு சென்றவுடன், நமக்கு வந்திருந்த மெசேஜ்ஜை செக் செய்து கொண்டிருக்கும் போது. p என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் முந்தைய மெசேஜ்ஜிற்கு செல்லலாம். அதேபோல் N என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் அடுத்த மெசேஜ்ஜிற்கு செல்லலாம். 

மெயின் விண்டோ வருவதற்கு அதேபோல் செட்டிங்க்ஸ், இன்பாக்ஸ், டிராப்ட் போன்ற எந்த உபயோகத்தில் இருந்தாலும். Shift+Esc கிளிக் செய்வது மூலம் மெயின் விண்டோவிற்கு வந்துவிடலாம். 

அதேபோல் நெக்ஸ்ட் சேட் அல்லது கம்போஸிங்கிற்கு செல்வதற்கு Cntrl + என்ற பட்டணை கிளிக் செய்யலாம். cc, bcc மெயில் கம்போஸ் (Mail compose). அதாவது மெயில் உருவாக்குவதற்கு Cntrl+Entr ஆகிய பட்டண்களை அமுக்கி சார்ட்கட் பயன்படுத்தி கொள்ளலாம். 

அதேபோல் CC மெயில் ஐடியை இன்ஸர்ட் செய்வதற்கு Cntrl+shift+C என்ற பட்டணை கிளிக் செய்துகொள்ளலாம். மேலும் பிசிசி மெயில் ஐடியை இன்ஸர்ட் செய்வதற்கு Cntrl+shift+B என்ற பட்டணை கிளிக் செய்யலாம். 
மேலும் Cntrl+K என்ற பட்டணை கிளிக் செய்வதன் மூலம் இன்ஸர்ட் லிங்கை வைத்து கொள்ளலாம். மேலும் Cntrl+M என்ற பட்டணை கிளிக் செய்து ஸ்பெல்லிங் ஆப்ஸனை பெறலாம். 

G+N, G+P G+N என்ற பட்டணை கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு எடுத்து செல்லலாம். மேலும் G+P என்ற பட்டணை கிளிக் செய்யும் போது முந்தைய பக்கத்திற்கு செல்லலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X