2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

இணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் அறிமுகம்

J.A. George   / 2020 நவம்பர் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைக் கொண்ட வசதிகளை அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது. 

இந்நிறுவனம் தற்போது இணையப் பக்கங்களை வீடியோவாக மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. 

இத்தொழில்நுட்பமானது URL2Video என அழைக்கப்படுகின்றது. அதாவது இணையப் பக்கம் ஒன்றின் முகவரியினை (URL) உள்ளீடு செய்ததும் அப்பக்கத்தினை அசைப்பதற்கு ஏற்றவாறு ஒரு வீடியோவாக பதிவு செய்து பெற முடியும்.

தற்போது இவ்வசதி பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

இவ்வசதி தொடர்பான மேலதிகதகவல்களை https://ai.googleblog.com/2020/10/experimenting-with-automatic-video.html எனும் இணைப்பில் சென்று பார்வையிட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X