Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்து வருடங்களுக்கு முன்னர், முதலீட்டாளர்களும் வங்கிகளுமே யாழ் மண்ணை நோக்கி வந்தன. ஆனால், அம்மண்ணில் வாழும் இளம் சமூத்தினரிடம் காணப்படும் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆற்றல் வெளிப்படுத்தப்பட வேண்டும், யாழ்.மண் இன்னொரு சிலிக்கன் பள்ளத்தாக்காக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்ப்பிக்கப்பட்டு யாழ் மண்ணை நோக்கி முதல் காலடியை வைத்தது Yarl IT Hub. எந்த இலாப நோக்கமுமின்றி இளம் தலைமுறையினரிடையே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அவர்களிடம் அத்துறையில் காணப்படும் படைப்பாற்றலுக்கான ஒரு மேடையாக Yarl IT Hub உம் அவர்களால் நடத்தப்படும் Yarl Geek Challenge அமைகின்றது.
இவ்வருடத்துக்கான Yarl Geek Challenge போட்டிகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஆரம்ப வைபவம், நல்லூரில் உள்ள தியாகிகள் அறக்கொடை நிறுவன மண்டபத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது. இதில் 70க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
வைபவத்தின் முன்னுரையை தொடர்ந்து, இவ்வருடத்துக்கான Yarl Geek Challenge போட்டி விதிமுறைகளை Yarl IT Hub குழுமத்தின் இளையோர்களினால் வித்தியாசமான முறையில் பாத்திரமேற்று நடித்து காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து Yarl Geek Challenge இரண்டாம் பருவத்தின் வெற்றியாளர், மற்றும் Arima Technologies நிறுவனத்தின் பயனர் இடைமுக வடிவமைப்பாளரும் ஆகிய குமரன் ரகுநாதன் “பயனர் இடைமுகப்பு என்பது பயனரின் அனுபவம் அல்ல” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பசுமைத் தொழில்நுட்பத்தை வலியுறுத்தும் முகமாக ECOsteem நிறுவனத்தின் ஸ்தாபகர் ரமேஷ் பாலச்சந்திரனின் உரை இடம்பெற்றது. Dialog Axiata PLC நிறுவனத்தின் Ideamart தளத்துக்கான Developer Relation பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஷஃப்ராஸ் ரஹீமின் ஐடியாமார்ட் நிரலி இடைமுகப்பு பாவித்து செயலிகளை அமைப்பது எப்படி எனும் விளக்கவுரை அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து Yarl Geek Challenge மூன்றாம் பருவத்தின் வெற்றியாளரும் Techkitez (Pvt) Ltd நிறுவனத்தின் இயக்குநருமாகிய பிரசாந் சுபேந்திரன் “YGC - Techkitez” தன் முயற்சியாண்மைக்கான பயணத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து Iykons Innovations and Consulting (pvt) Ltd நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை மென்பொருள் பொறியாளர் திரு. அழகரசன் மஹாலிங்கம் “முயற்யாண்மைக்கான பயணத்திற்காக தயார்படுத்தல்கள்” எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார், முயற்சியாண்மை பயணத்திற்கு தயாராகும் மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறந்த புத்தக குறிப்புகளையும் அவர் வழங்கினார். இறுதியாக மீண்டும் போட்டி பற்றிய விபரங்களை அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி மாலை 4.00 மணியளவில் நிறைவுற்றது.
Yarl Geek Challenge - Season 5 போட்டிகள் பற்றிய விபரங்கள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் http://www.yarlithub.org/ygc/ எனும் இணையதள முகவரியில் அறிந்துகொள்ள முடியும். மேலும் ஆர்வமுள்ளோர் http://www.yarlithub.org/ygc/timeline.html எனும் இணையதள முகவரியில் போட்டிக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
போட்டியில் பங்குபெற விரும்புவோர், எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன் தங்கள் விண்ணப்பங்களை event@yarlithub.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். போட்டி பற்றிய விபரங்களுக்கு மில்லர் , miller@yarlithub.org , 0750395802 தொடர்பு கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
2 hours ago