2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

அப்பிளின் வருமானம் உயர்வு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டு 2015 இன் நான்காம் காலாண்டுப் பகுதியில் 51.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இது, கடந்த வருடத்தின் இதே காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடும்போது 22 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த நான்காவது காலாண்டுப் பகுதியில் சாதனை ரீதியாக 48 மில்லியன் ஐ‌போன்களை அப்பிள் நிறுவனம் விற்றுள்ளது. எனினும் ஆய்வாளர்களின் எதிர்பார்த்த ஐபோன் விற்பனை எண்ணிக்கையை அப்பிள் நிறுவனம் அடைந்திருக்கவில்லை.

இதேவேளை 11.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த நான்காவது காலாண்டுப் பகுதியில் நிகர வருமானமாக பதிவு செய்துள்ள அப்பிள் நிறுவனம், இதுவரை கடந்து வந்த வருடங்களில் இந்த 2015ஆம் ஆண்டையே வெற்றிகரமான வருடமாக பதிவு செய்துள்ளது.

இந்த நான்காவது காலாண்டுப் பகுதியில் சாதனை ரீதியான ஐபோன் விற்பனை, என்றுமில்லாதவாறான ஐமக் விற்பனை, பரந்தளவில் சந்தையில் கிடைக்கக்கூடியவாறு உள்ள Apple Watch இன் மூலமே இந்த அதிக வருமான உயர்வு சாத்தியமாகியுள்ளதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐபோன் வாங்கியவர்களில் 30 சதவீதமானோர், கூகிள் அன்ட்ரொயிட் இயங்குதளத்தில் இருந்து மாறியோர்கள் ஆவார்கள் என அப்பிளின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார். இது, எப்போதுமில்லாத உயர்வான மாறும் சதவீதமாகும்.

அடுத்து அப்பிளின் இந்த நான்காவது காலாண்டு வருமானத்தின் 62 சதவீதம் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தே கிடைத்துள்ளது.  இதிலும், சீனாவிலேயே அதிகப்படியாக 12.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .