Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திராயன் 3 2021 ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் கடந்தத செப்டம்பர் 6-ம் திகதி தெரிவித்தார்.
சந்திரயான 3 ஆனது சந்திரயான 2-இலிருந்து சற்று வித்தயாசமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் அதில் ஆர்பிட்டர் இருக்காது, ஆனாலும் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த 2020-ஆம் ஆண்டில் சந்திராயான்-3 ஐ செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது,ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி விதித்த லொக்டவுன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
ஆனாலும் 2018-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சந்திரனுக்கான இஸ்ரோவின் முதல் பணித்திட்டமான சந்திராயன் 1 நிலவின் துவருங்களில் துருப்பிடித்திருக்கலாம் என்பதைக் காட்டும் படங்களை அனுப்பியுள்ளது.
அதாவது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய கருத்து என்னவென்றால் சந்திரனின் மேற்பரப்பில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருப்பதாக ஏற்கெனவே அறியப்பட்டாலும் நீர் மற்றும் ஒக்ஸிஜன் இருப்பதை பற்றி இதுவரை அறிந்ததில்லை.
இருந்தபோதிலும் துருவை உருவாக்க இரும்புடன் நீர் மற்றும் ஆக்சிஜனின் தொடர்பு இருக்க வேண்டும் என்பதால் நிலவிலிருந்து சந்திராயன்-1 அனுப்பியுள்ள படங்கள் முகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன.
மேலும் அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் விஞ்ஞானிகள். இதில் பூமியின் வளிமண்டலம் அளிக்கும் ஒரு உதவியும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
அதாவது பூமியின் வளிமண்டலம் நிலவையும் பாதுகாக்கக்கூடும் என்பது அவர்களது கருத்து. பின்பு இவ்வாறு சந்திராயன் 1-ன் நிலவை பற்றிய தரவுகள் ஆனது நிலவின் துருவங்களில் தண்ணீர் இருக்கக்கூடும் என்பதை குறிப்பிடுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
36 minute ago