Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 30 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிளினுடைய புதிய அலைபேசி இயங்குதளத்தின் இற்றைப்படுத்தலிலிருந்த குறைபாடு காரணமாக ஐபோன், ஐபோன் பாவனையாளர்கள், தமது சாதனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில், இதற்கு தற்போது தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.
சில பழைய பதிப்பு அலைபேசிகளிலும் டப்லெட்களிலும் iOS 9.3 இற்றைப்படுத்தல்களை மேற்கொள்ளும்போது, அவற்றை முன்னர் set up செய்யப் பயன்படுத்திய Apple IDஐயும் கடவுச்சொல்லும் வினவப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, தாங்கள் வினவப்பட்ட தகவல்களை மறந்து விட்டதாகவும் அல்லது தெரியாது எனவும் அதனால் தங்களது சாதனங்களை பயன்படுத்தமுடியாமல் போயுள்ளதாக முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, ஐபோன் 5S, அதற்கு முந்தைய திறன்பேசிகள், ஐபாட்எயார், அதற்கு முந்தைய டப்லெட்களை இந்தப் பிரச்சினை பாதித்ததாக அப்பிள் ஒத்துக்கொண்டது.
இதற்கு தீர்வாக, iCloud கணக்கினுள் நுழைந்து Find My function ஊடாகவோ அல்லது சாதனத்தை கணினி ஒன்றுடன் இணைத்து தற்போதைய Apple ID தகவல்களை iTunesகளில் பதிவதன் மூலமும் சாதனங்களில் உள்நுழையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக உதவியைப் பெற விரும்பினால் Apple Supportஐ தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
3 hours ago