2024 நவம்பர் 02, சனிக்கிழமை

iOS 9 ஸபாரியில் மொஸிலாவின் Content Blocker

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிளின் இயங்குதளமான iOS 9 இன் அப்பிளின் இணைய உலாவியான ஸபாரிக்கான Content Blockerஐ Disconnect blocklistஐ அடிப்படையாக கொண்டு Focus by Firefox எனும் செயலியை பயர்பொக்ஸ் தயாரிப்பாளரான மொஸிலா, செவ்வாய்க்கிழமை (08) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Content Blocker ஆனது மற்றைய Content Blockerகளைப் போன்று தனித்து விளம்பரங்களை மட்டும் தடுக்காமல், இது, குறிப்பிட்ட வகையான விளம்பரங்களை தடுப்பதுடன், தற்போது அலைபேசி உலாவிகளில் எம்மைப் பின் தொடருகின்ற பகுப்பாய்வு, சமூக வலைத்தள பின் தொடரிகளையும் தடுக்கவுள்ளது.

மேற்படி முறைமையிலேயே தனது தனிப்பட்ட இணைய உலாவி சேவையில்,  கண்காணிக்கப்படுவதிலிருந்து தடுக்கப்படும் பாதுகாப்பு முறைமையை தனது பயனர்களுக்கு பயர்பொக்ஸ் வழங்கியிருந்தது.

இந்த Content Blocker முறைமையானது, முற்றிலும் புதிதாக இல்லாவிட்டாலும் இந்தச் சேவையை அப்பிள் ஆனது, iOS இயக்குதளத்தில் உள்ள ஸபாரிக்கு கொண்டு வர முடிவெடுத்தமை அதிசயிக்கத்தக்கது.

இதேவேளை, iOS இயங்குதளத்தில் மொஸிலாவின் சொந்த அலைபேசி இணைய உலாவியான பயபொக்ஸ் இருக்கின்ற போதும் மேற்படிச் சேவையை அதில் பெற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மூன்றாவது நபர் content blockersஐ அப்பிள் அனுமதிப்பதில்லை.

தவிர, அன்ரொயிட் இயங்குதளத்தில் மேற்படிச் சேவையை மொஸிலா அறிமுகப்படுத்தாது என்பதே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அன்ரொயிட்டில் உள்ள பயபொக்ஸில் Private Browsing mode ஏற்கனவே உள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .