2024 நவம்பர் 02, சனிக்கிழமை

Auro 3D தொழில்நுட்ப ஒலியில் 'விஸ்வரூபம்'

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 20 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமல் இயக்கத்தில் வெளியாக இருந்த 'விஸ்வரூபம்' திரைப்படம் ஜனவரி 2013க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு 'விஸ்வரூபம்'. இத்திரைப்படத்தினை பி.வி.பி  (PVP) சினிமாஸ் வெளியிட இருக்கிறது.

ஒக்டோபர் 12ஆம் திகதி 'விஸ்வரூபம்' வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன.  இப்படத்துடன் சூர்யாவின் 'மாற்றான்' மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின.

இந்நிலையில் 'விஸ்வரூபம்' திரைப்படத்தை 2013ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் ஒலியை Auro 3D என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல்.

Wilfried Van Baelen என்பவர் இப்பணியில் உதவி செய்வதற்காக வந்து இருக்கிறார். இதுவரை George Lucasன்  'Red Tail' என்கிற திரைப்படம் மட்டுமே Auro 3D தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கிறது. Auro 3Dஇல் முதல் இந்திய படமாக 'விஸ்வரூபம்' அமைய இருக்கிறது.

Auro 3D என்பது ஒலியில் 3D வகை சார்ந்ததாகும். 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் நிறைய ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகள் இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தினை தேர்வு செய்து இருக்கிறாராம் கமல்.

கமல் சென்னையில் 20 திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி இந்த தொழில்நுட்பத்தினை அமல்படுத்த கூறி இருக்கிறாராம். ஒலியில் புதுப்பாதை போட இருக்கிறது 'விஸ்வரூபம்'.

You May Also Like

  Comments - 0

  • Vivekamal Friday, 28 December 2012 10:15 AM

    கமல் வாழ்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .