Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 22 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான Yarl IT Hubப்பானது சிறந்த கணினித் தொடர்பாடல் திறமைகள், படைப்பாற்றலினூடாக புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கும் இளம் தொழில்நுட்பவல்லுநர்களை அடையாளங்காணும் போட்டி நிகழ்ச்சியான Yarl Geek Challenge-இனை வெற்றிகரமாக நடாத்தி வருகின்ற நிலையில், வட மாகாணத்தின் எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துறையினரை இலக்காகக் கொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான Yarl IT Hubஇன் முதலாவது ஒன்றுகூடலானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூரிலுள்ள தியாகி அறக்கொடை நிறுவன மண்டபத்தில் Yarl IT Hub-இன் புதிய தலைமுறையினால் ஒழுங்கு செய்யப்பட்டு, நடைபெற்றிருந்தது.
தகவல் தொடர்பாடல் துறையில் உள்ள இளம் மாணவர்களை சமுகத்திற்க்கு பயன்படும் வகையில் சிந்திக்கவும் மிகவும் போட்டிகரமான இத்துறையில் பிரகாசிப்பதற்க்கு தேவையான மென் திறன்களை அடையாளப்படுத்தலுமே மேற்படி ஒன்றுகூடலின் முக்கியமான நோக்கமாக காணப்பட்டது. தவிர, Yarl IT Hubஇன் வழமையான நிகழ்வுகளில் முன்வைக்கப்படும், எமது இளம் தலைமுறையினரை தகவல் தொடர்பாடலுடன் தொடர்புடைய முயற்சியாண்மைகளுக்கு ஊக்கப்படுத்தல் எனும் தொனிப்பொருளும் ஒன்றுகூடலில் முன்வைக்கப்பட்டிருந்தது.
மேற்படி ஒன்றுகூடலானது, மேற்படி ஒன்றுகூடலின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான மில்லர் வழங்கிய Yarl IT Hub பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பமானது. அதில் அவர், Yarl IT Hub இன் வரலாறு, அது எவ்வாறான பணியாற்றுகிறது என கலந்துரையாடலில் கலந்துகொண்ட புதிய முகங்களுக்காக சிறிய நிகழ்த்துகை ஒன்றை ஆற்றியிருந்தார்.
அதனையடுத்து, Yarl IT Hubஇன் நிகழ்வுகளில் பல தடவைகள் பங்குபற்றியிருந்த, அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரிட்சையில் தகவல் தொடர்பாடல் துறையில் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஞானகீதன், கல்வி நடவடிக்கையை தகவல் தொழில்நுட்பம் பாதிக்குமா என்று கலந்துரையாடியதுடன், எவ்வாறு பயனுள்ள வகையில் தகவல் தொழில்நுட்பத்தை பாவிப்பது என்பது தொடர்பாகவும் Yarl IT Hub தொடர்பான தனது அனுபவப் பகிர்வுகளையும் பகிர்ந்திருந்தார்.
அடுத்து, Yarl IT Hubஆல் நடாத்தப்படும் ஜூனியர்களுக்கான Yarl Geek Challenge ஆனது, இவ்வருடமும் வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்தே நடாத்தப்படவுள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இப்போட்டியை நடாத்த திட்டமிடுவதாகவும் Yarl IT Hubஆல் அறிவிக்கப்பட்டது. கடந்தவருடம் இடம்பெற்றதுபோலவே இவ்வருடமும் வலய மட்டப் போட்டிகளை நடாத்தி, அதன்பின்னர் இறுதிப்போட்டியை நடாத்தவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மயூரன் தெரிவித்தார். இவ் Yarl Geek Challenge தொடர்பான மேலதிக தகவல்கள் இந்நிறுவனத்தின் இணையத்தளமான www.yarlithub.org இல் காணப்படுகிறது.
இது தவிர, Yarl IT Hub இன் Incubation center பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. மேற்படி Yarl IT Hub இன் Incubation center மூலம், புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பிக்கவென இருக்கும் பல திட்டங்களுக்கான நிதி மற்றும் வியாபாரம் சார் உதவிகள் வழங்கப்படவுள்ளது.
அடுத்து, 2014ஆம் ஆண்டுக்கான கூகுளின் இலங்கைக்கான மாணவத் தூதரான அழகரசன் மஹாலிங்கம் “எதிர்காலம் என்பது நீங்கள் உருவாக்குவது” எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார். எதிர்காலத்தை எவ்வாறு கட்டமைப்பது என்பது தொடர்பான ஆலோசனைகளை அவர் தனது உரையில் வழங்கியிருந்தார்.
இறுதியாக, ஒன்றுகூடல் முடியும் தருணத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு கணினி மயப்படுத்தப்பட்ட தீர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்ததுடன், அதனையடுத்து சிவரதனால் வழங்கப்பட்ட நன்றியுரையுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
5 hours ago