Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
Yarl IT Hub நிறுவனத்தால் நடாத்தப்படும் Yarl Geek Challenge இன் 4ஆம் பருவகாலத்தின் ஜூனியர் பிரிவுப் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில் (TCT Hall) இடம்பெறவுள்ளது. இம்முறை வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்தே ஜூனியர் பிரிவுப் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன.
இந்த இறுதிக்கட்ட போட்டிகளுக்கு அணிகளைத் தெரிவு செய்யும் முதற்கட்ட வலய மட்டத்தினாலான தெரிவுப்போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (09) , வட மாகாணத்திலுள்ள ஐந்து மதிப்பீட்டு நிலையங்களில் இடம்பெற்றிருந்தது.
இந்தப் போட்டிகளுக்காக வடமாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலிருந்தும் பல பாடசாலை மாணவர்கள் குழுக்களாக சேர்ந்து தம்மைத் தயார்ப்படுத்தி வருகை தந்திருந்தனர்.
இதில் வவுனியா தெற்கு - கணினி வள நிலையம் (CRC) இல் அமைந்த மதிப்பீட்டு நிலையத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, மன்னார், மடு ஆகிய கல்வி கல்வி வலய மாணவர்களுக்கான மதிப்பீடுகள் இடம்பெற்றிருந்தன. மாங்குளம் மத்திய மகாவித்தியாலயமத்தில் அமைந்திருந்த மதிப்பீட்டு நிலையத்தில் துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலய மாணவர்களுக்கான மதிப்பீடுகள் இடம்பெற்றிருந்தன.
அடுத்து, கிளிநொச்சி - கணினி வள நிலையம் (CRC) மதிப்பீட்டு நிலையத்தில் கிளிநொச்சி கல்வி வலய மாணவர்களுக்கான மதிப்பீடுகள் இடம்பெற்றன. மேலும், மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் அமையப்பெற்ற மதிப்பீட்டு நிலையத்தில் தென்மராட்சி மற்றும் வடமராட்சி கல்வி வலய மாணவர்களுக்கான மதிப்பீடுகள் நடைபெற்றன.
இது தவிர யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் அமைந்திருந்த மதிப்பீட்டு நிலையத்தில் யாழ் கல்வி வலயம், தீவக வலயம் மற்றும் வலிகாம வலய மாணவர்களுக்கான மதிப்பீடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த முதற்கட்ட போட்டிகளில் பாடாசாலைகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தாம் காணும் பிரச்சினைகளுக்கு இணையத்தளங்களை வடிவமைப்பதினூடாக, திறன்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்குவதினூடாக, வன்பொருள் ஊடாக தீர்வுகளை உருவாக்கி அளிக்கை செய்து இருந்தனர்.
இதில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பாடசாலையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தமக்கு தேவையான இணைய வசதிகளோ, மற்றும் போதுமான கணனி வசதிகளோ இல்லாத போதிலும், அங்கிருந்து வந்த அணிகள் காட்டிய ஆர்வமும், அவர்கள் உருவாக்கிய படைப்புக்களும் பிரமிப்பூட்டுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படாத பல புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் பயன்படுத்தி இருந்தமை ஆச்சரியமாக இருந்தது.
இடம்பெற்று முடிந்த முதற்கட்டப் போட்டிகளில் இருந்து, இறுதிப்போட்டிகளுக்கு 31 அணிகள் தெரிவாகியிருந்தன.
இதில் வடமராட்சி கல்வி வலயத்திலிருந்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஒரு அணியும் பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலிருந்து ஒரு அணியும் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலிருந்து ஒரு அணியும் தெரிவாகியிருந்தன.
தென்மராட்சி கல்வி வலயத்திலிருந்து மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திலிருந்து ஒரு அணியும், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியிலிருந்து ஒரு அணியும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலிருந்து ஒரு அணியும் தெரிவாகியிருந்தன.
வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்திலிருந்து ஒரு அணியும், தீவகம் கல்வி வலயத்தின் தியாகராஜா மத்திய கல்லூரியிலிருந்து இரு அணிகளும், வேலணை மத்திய கல்லூரியிலிருந்து இரு அணிகளும் தெரிவாகியிருந்தன.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திலிருந்து வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையிலிருந்து நான்கு அணிகளும், யாழ் இந்துக் கல்லூரியலிருந்து மூன்று அணிகளும் தெரிவாகின.
கிளிநொச்சி கல்வி வலயத்திலிருந்து வட்டகச்சி மத்திய கல்லூரியிலிருந்து ஒரு அணியும், கிளிநொச்சி இந்துக் கல்லூரிலிருந்தான ஒரு அணியும் தெரிவாகியிருந்தன.
வவுனியா தெற்கு கல்வி வலயத்திலிருந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்திலிருந்து இரு அணிகளும், நெல்லுக்குளம் கலைமகள் மகா வித்தியாலத்திலிருந்தான ஒரு அணியும் தெரிவாகியிருந்தன. வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கனகராயன்குளம் மகா வித்தியாலத்திலிருந்து மூன்று அணிகள் தெரிவாகியிருந்தன.
முல்லைத்தீவு கல்வி வலயத்திலிருந்து வித்தியானந்தா கல்லூரியிலிருந்து இரு அணிகளும், முல்லைத்தீவு மகா வித்தியாலத்திலிருந்தான ஒரு அணியும் தெரிவாக்கியிருந்தன. துணுக்காய் கல்வி வலயத்திலிருந்து மல்லாவி மத்திய கல்லூரி அணியும், பாண்டியன் குளம் மகாவித்தியாலய அணியும் தெரிவாகியிருந்தன.
இறுதிப்போட்டிகளின்போது மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான தொழில்நுட்ப சார் உதவிகளை Yarl IT Hubவழங்கவிருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான விருதுகள் பிரமாண்டானதொரு விழாவில் வழங்கப்படவிருக்கின்றன.
ச.இலங்கேஸ்வரன் Saturday, 17 October 2015 06:36 AM
வாழ்த்துக்கள், நல்லதோர் முயற்சி.
Reply : 0 0
thevathas Saturday, 17 October 2015 11:50 PM
மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துக்கள்
Reply : 0 0
துசி Sunday, 18 October 2015 07:35 AM
சிறப்பான முயற்சி. நிச்சயம் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago