Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
Yarl IT Hub நடாத்தும் Yarl Geek Challenge (YGC) போட்டிகள் ஐந்தாம் வருடமாக இம்முறையும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்காகவும், தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்காகவும் எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதி தொடக்கம் நடத்தப்படவுள்ளது.
YGC 5 இல் எவ்வாறு பங்குபற்றுவது?
போட்டியிட விரும்புவர்கள் தங்களது புத்தாக்க செயற்திட்டத்திற்கான முன்மொழிவினை (project proposal), event@yarlithub.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
திறமையான படைப்புக்கள், யாழ்பாணத்தில் நடைபெறும் முதற்கட்ட சுற்றுக்குத் தெரிவுசெய்யப்படும். தெரிவுகள், யாழப்பாண ஹட்டன் நஷனல் வங்கி (HNB) கேட்போர் கூடத்தில், எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதி தொடக்கம் நவம்பர் ஆறாம் திகதி வரை நடைபெறும்.
முதற்கட்ட போட்டிகளில், நடுவர்களால் தெரியப்படும் அணிகள், எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி கொழும்பில் நடக்கும் இறுதிபோட்டியில் மோதவிருக்கின்றன.
YGC எவ்வாறு வேறுபடுகிறது
இப்போட்டிகள், புதிய தொழில் முயற்சியாளர்களையும், தொழில்நுட்பவியலாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளின்போது, போட்டியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் செயற்திட்டத்தினை மேம்படுத்த தொழில் சார் முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் உதவிசெய்வார்கள்.
இம்முறையில் உள்ள புதிய அம்சங்கள் என்ன ?
YGC ஆனது, புதிய முயற்சியாளர்கள், சிந்தனையாளர்களை அடையாளங்கண்டு அவர்களின் எண்ணங்களிற்கு உயிரளிக்கும் தளமாகும். இது உங்களுக்கான சந்தர்ப்பம்! முன்னேறுங்கள்!
விரையுங்கள்! இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக, உங்களின் செயற்திட்டத்திற்கான முன்மொழிவினை (project proposal) பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் - event@yarlithub.org
மேலதிக விபரங்களுக்கு - http://www.yarlithub.org/ygc/timeline.html நாடவும்
சமீபத்திய அறிவுப்புக்களுக்காக, Facebook -https://www.facebook.com/yarlithub இல் மற்றும் Twitter - https://twitter.com/YarlITHub இல் தொடரலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago