2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

YGC 5 அணி அறிமுகம்: Qurd_Core அணியின் ANIVA

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 21 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக கணினி விஞ்ஞான மாணவர்கள் ஐவன், அருண் , நசீர், பிரவீன் ஆகிய நால்வரைக் கொண்ட அணியான  Qurd_Core, விளம்பரங்களின் எதிர்காலம் எனக்கூறப்படும் “ஹாலோகிராம்” (hologram) மற்றும் மெய்நிகர் உண்மை (virtual reality) தொழில்நுட்பங்களின் கலவையாக உருவாக்கப்பட்ட “ANIVA”  எனும் படைப்பினை உருவாக்கியிருந்தனர்.

சிறப்பங்காடிகளில் விளம்பரப்படுத்தல் என்பது மிகவும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு பொறிமுறை. ANIVA எனப்படும் இப்படைப்பு Augmented Reality, Virtual Reality மற்றும்  Holograms தொழில்நுட்ப உதவியுடன் விளம்பரங்களை உயிர்பெறச்செய்யும் வித்தியாசமான ஒரு முயற்சி . மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவற்றுடன் ஒளி-ஒலி தொழிநுட்பமும்  உபயோகிக்கப்படுத்தப்பட்டுள்ளது . ANIVA, Python , C ++ ஆகிய நிரல்மொழிகளை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வணியின் நோக்கம், ஒரு சிறப்பங்காடியின் வரவேற்புப் பகுதியில் ஒரு உயிர்ப்புள்ள கேலிச்சித்திர கதாபாத்திரம், வாடிக்கையாளர்களுக்கு அங்காடியில் உள்ள சிறப்புகள், கடைகள் தொடர்பாக விளம்பரப்படுத்த வைப்பதாகும். மேலும், அக்கதாபாத்திரம் வாடிக்கையாளர்களை பொருட்கள் தொடர்பாக வழிநடத்தவும், தொடர்பாடக் கூடிய வகையில் வடிவமைப்பதே இவ்வணியின் எதிர்கால நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X