2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

YGC 5 அணி அறிமுகம்: Pargus அணியின் Auto Self Care

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

Auto Self Care எனப்படும் வாகன இயந்திரங்களின் நிலைமை, வாகன ஓட்டுநர்களின்  வாகனமோட்டும் இயல்பு என்பனவற்றைக் கையடக்கமான இலத்திரனியல் உபகரணம், திறன்பேசிச் செயலியொன்றின் மூலம் கண்டறியக்கூடிய படைப்பொன்றினைத் தயாரித்திருந்த ஹரிஷாந்த், நிரோஜன், சஜீவன்,சிவரஞ்சன், கோகுலன் ஆகியோரைக் கொண்ட Pargus  அணியானது Yarl Geek Challengeஇன் ஐந்தாவது பருவகாலத்தின் வெற்றியாளர்களாக தெரிவாகியிருந்தது.

இத்தசாப்தத்துக்கான தொழில்நுட்பம் எனக் கூறப்படும் IOT தொழில்நுட்பத்தின் உதவியுடன் OBD 2 எனும் வன்பொருள், அன்ட்ரொயிட்  திறன் பேசி தொழில்நுட்பத்துடன் ஆன செயலியுடன்  இணைந்து செயலாற்றுவதன் மூலம் உங்கள் வாகனத்துக்குள் இருக்கும் முக்கியமான உபகரணங்கள், செயற்பாடுகள் அனைத்தையும் உங்கள் திறன்பேசியின் உதவியுடன் அறியக்கூடியதாக Auto Self Care உருவாக்கப்பட்டுள்ளது.

Auto Self Careக்கான தேவை உலகெங்கும் அதிகரித்துவருவதானால் இதனை உடனடியாக சந்தைப்படுத்த Pargus அணி எண்ணியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X