Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 12 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞான மாணவர்களின் Coderush அணியினர், தற்கால நடைமுறைக்குத் தேவையான படைப்பொன்றை உருவாக்கியிருந்தனர்.
ஆயிரக்கணக்கான கிலோகிராம் நிறையுடைய பொருட்களை இடம்பெயர்ப்பது இலகுவான காரியம் அல்ல . மேலும், பாரவூர்திகளை, இலகு வாகனங்களை போல சுலபமாகக் கண்டுபிடித்து விடவும் முடியாது. இந்நிலையிலேயே “Truckbook” ஆனது, உங்கள் பொருட்களுக்கேற்ற பாரவூர்தியை, நொடிப்பொழுதில் ஒழுங்கு செய்து தருகிறது. Truckbook ஒரு திறன் பேசிச் செயலியாகும்.
அன்ட்ரொயிட், இணையத்தள தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட மேற்குறித்த செயலி, ,உங்கள் பொருட்களுக்கேற்ற அளவுகளில், பொருளின் தன்மைக்கேற்ற பாரவூர்திகளை தெரிவுசெய்து இலகுவான முறையில் தெரிவுசெய்யும் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும், இடஞ்சுட்டல் தொழில்நுட்பம் மூலம் இச்செயலி இயங்குவதால், நீங்கள் இருக்கும் இடத்துக்கு மிக அருகாமையில் இருக்கும் பாரவூர்திகளை, வரைபடத்தின் மூலம் தெரிவு செய்ய முடியும்.
திறன் பேசி, இணையத்தளம் மூலம் செயற்படும் இச்செயலி, பாரவூர்தி சாரதிகளையும், பாரமான பொருட்களை அடிக்கடி இடம்பெயர்க்கும் இரும்பு ஆலைகள் , மா ஆலைகள், குளிர்பான நிறுவனங்கள், கட்டடம் கட்டும் நிறுவனங்கள் ஆகியோரை ஆரம்பப் பயனாளர்களாக கொண்டு செயற்படுவது குறிப்பிடத்தக்கது .
மேற்குறிப்பிட்டவை தவிர, மேற்குறிப்பிட்ட செயலியின் சிறப்பம்சமாக, பொருட்களை ஏற்றி அனுப்பிய பாரவூர்தி இடைவழியில் பழுது பட்டால், சேவையைத் தொடர்ந்து வழங்கும் முகமாக, பழுது பட்ட இடத்துக்கு அருகாமையில் உள்ள ஊர்தி, தரவுத்தளத்திலிருந்து பணியைத் தொடர அழைக்கப்படும். இதனால், குறித்த பொருள் குறித்த நேரத்தில் நாட்டின் எப்பகுதிக்கும் கொண்டு சேர்க்கப்படும் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago