Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 03:28 - 1 - {{hitsCtrl.values.hits}}
காணொளி அழைப்புகளுக்கு WhatsApp ஒத்துழைப்பு வழங்குவதற்கான வசதி, விரைவில் அறிமுகமாகவுள்ளது. கிடைக்கப் பெற்ற புதிய அறிக்கைகளின்படி, WhatsApp-இன் அன்ட்ரொயிட் செயலிகளின் முழுமை பெறாத சில சோதனை வடிவங்களில், காணொளி அழைப்புகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அப்பிளின் திறன்பேசிகளுக்கான இயங்குதளமான iOS-இல், WhatsApp-இன் இற்றைப்படுத்தல் கடந்த வாரம் நிகழ்ந்தபோதும் காணொளி அழைப்புக்கு ஒத்துழைக்கும் வசதி, அந்நேரத்தில் சேர்க்கப்படவில்லை.
அன்ட்ரொயிட் இயங்குதளத்திலுள்ள சில பயனர்களின் முழுமை பெறாத சோதனை வடிவங்களில், இற்றைப்படுத்தப்பட்ட செயலி இடைமுகத்தினூடாக காணொளி அழைப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகவிருந்தது.
காணொளி அழைப்புக்கு ஒத்துழைக்கும் WhatsApp பதிப்பைக் கொண்டிருப்பவர்கள், அழைப்புப் பொத்தானையோ அல்லது தொடர்பாளர் விவர அட்டையை தொடுவதன் மூலமாக, காணொளி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மேற்கூறியவாறு நடைமுறைகளைப் பின்பற்றும்போது, வழமையான குரல் அழைப்பா அல்லது காணொளி அழைப்பா என்று வினவும் புதிய திரையொன்று தோன்றுவதுடன், காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும்போது, அழைப்புப் பதிவில் கமெரா வடிவம் தோன்றுகிறது. வழமையான குரல் அழைப்புகளுக்கு, அலைபேசி வடிவம் ஒன்றே காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
எனினும் காணொளி அழைப்புக்கு ஒத்துழைக்காத WhatsApp பயனர்களுக்கு, காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும்போது, அவை சாதாரண குரல் வழி அழைப்பாக மாற்றமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளி அழைப்பு வசதியானது அன்ட்ரொயிட் இயங்குதளத்திலுள்ள சில பயனர்களுக்கு இவ்வாரம் கிடைத்த நிலையில், வின்டோஸ் திறன்பேசி பயனர்களில் சிலர், கடந்த வாரம் இவ்வசதியைப் பெற்றிருந்ததுடன், அவர்களுக்கு இற்றைப்படுத்தல் தேவைப்பட்டிருக்கவில்லை. அன்ட்ரொயிட் இயங்குதளத்தில் உள்ளவாறே, வின்டோஸிலும் காணொளி அழைப்புகள் இயங்கியிருந்ததுடன், அழைப்புகளினிடையே, குரலையும் காணொளியையும் நிறுத்தக் கூடியதாகவிருந்தது.
கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட பதிப்பில், காணொளி அழைப்பானது WhatsApp-இல் வந்திருந்தபோதும், பின்னர் அது நீக்கப்பட்டது. எவ்வாறெனினும், புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், இவ்வாறே WhatsApp சோதனையில் ஈடுபடுவது வழக்கமாகும். அன்ட்ரொயிட் இயங்குதளத்தில் குரல் வழி அழைப்புகள் வர முன்னர், இரண்டு மாதங்களுக்கு சோதனையில் இருந்ததுடன், iOS-இல் ஒரு மாதம் சோதனையில் இருந்தது.
பேஸ்புக்கினால் ஆளப்படும் WhatsApp ஆனது, தனது ஒரு பில்லியன் பயனர்களுக்கு, இவ்வளவு தாமதமாகவே குறித்த வசதியை அறிமுகப்படுத்துகின்றது என்பது தெளிவில்லாமல் உள்ளது. Google Duo-இன் வருகையே, இதற்கான முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது.
VIVEK Sunday, 24 March 2019 02:35 PM
IMO. COLL. VITEO. COLL IMO VEDEO COLL Play. Post photo. IMO VEDEO
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025