Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 29 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் அறிமுகப்படுத்தி, ஏறத்தாழ நான்கு வருடங்களில், தனது காணொளிப் பகிர்வுச் சேவையான Vine-ஐ மூடுவதாக, தற்போது டுவிட்டர் அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், மூடுவதற்கான காரணமெதையும் டுவிட்டர் தெரிவித்திருக்கவில்லை. எனினும், தனது மெதுவான வளர்ச்சி காரணமாக, தனது பணியாட்தொகுதியின் ஒன்பது சதவீதத்தினரைக் குறைப்பதாக, கடந்த வாரம் டுவிட்டர் அறிவித்திருந்தது.
எதிர்வரும் மாதங்களில், Vine அலைபேசிச் செயலியை நிறுத்துவதாக, Vine நிறுவனத்தின் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், உடனடியாக, செயலிகளிலோ, இணையத்தளத்திலோ, Vine-களிலோ மாற்றம் ஏற்படப்போவதில்லை. நீங்கள் அவற்றுக்குச் சென்று, உங்களது Vineகளை தரவிறக்கிக் கொள்ளலாம். இணையத்தளமானது, ஏற்கெனவே உள்ளவாறே இருக்கப் போகிறது. செயலியிலோ அல்லது இணையத்தளத்திலோ மாற்றம் ஏற்பட்டால் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
loop ஒன்றில் இயங்கும் ஆறு செக்கன் நீளமான காணொளிகளை Vine-இன் மூலம் பகிரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு Vine உத்தியோகபூர்வமாக அறிமுகமாவதற்கு முன்னரே, 30 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படும் தொகைக்கு, Vine-ஐ டுவிட்டர் கையகப்படுத்தியிருந்தது. எனினும் அதன்பின்னர், டுவிட்டரின் பிரதான இயக்குதளத்தில், தனியானதொரு காணொளி வசதியைச் சேர்த்திருந்ததுடன், நேரலை ஒளிபரப்புச் செயலியான Periscopeஐ கையகப்படுத்தி, அதனையும் அறிமுகப்படுத்தியிருந்தது.
டுவிட்டரின் டுவீட் ஒன்றிற்கான 140 character எல்லைக்கு, ஆறு செக்கன்கள் நீளமான காணொளிகள் மிகப்பொருத்தமான ஒன்று எனினும், தற்பொழுது, Snapchat, Instagram ஆகியவற்றின் குறும் காணொளிகளுடன் போட்டியிட முடியாத நிலையிலேயே Vine உள்ளது. இந்நிலையிலேயே, Vine-ஐ மூடும் முடிவை டுவிட்டர் எடுத்துள்ளது. எவ்வாறெனினும், Vine போன்ற வசதிகளை, தனது பிரதான செயலியில் டுவிட்டர் இணைக்குமா என்பது சந்தேகமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago