2024 நவம்பர் 23, சனிக்கிழமை

Note 7-இன் அம்சங்களை S7-க்கு கொண்டு வருகிறது சம்சுங்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரச்சினையைச் சந்தித்த, தனது Galaxy Note 7 திறன்பேசியின் சில அம்சங்களை, தனது, S7 மற்றும் S7 Edge சாதனங்களில் கொண்டு வருவதற்கு சம்சுங் பணியாற்றுகின்றது.

சில Galaxy Note 7-கள் தீப்பற்றுவதாகக் கிடைத்த அறிக்கைகளைத் தொடர்ந்து, Galaxy Note 7-களை மீள அழைத்ததுடன், அதன் தயாரிப்பை நிறுத்துவதாக, கடந்த வார ஆரம்பத்தில், சம்சுங் அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, கருத்துத் தெரிவித்துள்ள சம்சுங், தனது, S7 மற்றும் S7 Edgeஐ, புதிய வசதிகளுடன் மேம்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமது Galaxy Note 7-ஐ திருப்பி அளிப்பவர்கள், சந்தையிலுள்ள, வேறு போட்டி நிறுவனங்களின் திறன்பேசிகளிடம் செல்லாமல், சம்சுங் திறன்பேசி ஒன்றுடன் தொடர்வார்கள் என எதிர்பார்க்கிறது.

தனது மீச்சிறப்பு திறன்பேசியொன்றை, வருடத்தில் இரண்டு தடவையே, வழமையாக வெளியிடுகின்ற நிலையில், அடுத்த Galaxy S8 திறன்பேசி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதியே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகையில், அதுவரைக்கும், சம்சுங்கின் மீச்சிறப்பு திறன்பேசியாக S7 Edge விளங்கவுள்ளது. ஆகையால், தனது புதிய போட்டி வரவுகளான, iPhone 7 மற்றும் Google Pixel ஆகியவனற்றுடன் போட்டியிடுவதற்கு, தன்னால் முடிந்த அனைத்தையும் சம்சுங் செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, Galaxy Note 7-இன் செயற்பாடுகளை, மேலும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, “always-on screen” அம்சத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. “always-on screen” அம்சத்தின் மூலம், செயற்பாடற்ற நிலையில் திறன்பேசி இருக்கும் போதும், திரையில், புகைப்படங்கள், கடிகாரம், அறிவித்தல்களை பார்வையிட முடியும். இந்த வசதிக்காக, ஒரு மணித்தியாலத்தில், ஒரு சதவீதமான மின்னே செலவளியும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X