2024 நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை

MacBook Pro மடிக்கணினிகளில் Touch Bar

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 01 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசைப்பலகைக்கு மேலே மெல்லிய ஊடாடும் திரையையும் கைவிரல் உணரியையும் கொண்ட புதிய மடிக்கணினிகளை அப்பிள் வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த MacBook Pro Touch Bar ஆனது மென்பொருள்களுக்குரிய குறிப்பிட்ட கட்டளைகளை வழங்குவதுடன், Touch Bar பிரதியீடு செய்யும் function keysகளை விட மேலும் உள்ளூணர்வாக இருக்கும் என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் குறித்த அறிவிப்பானது அதிர்ச்சிகரமானதாக அமையவில்லை. ஏனெனில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் தமிழ்மிரரின் தொழில்நுட்பப் பக்கத்தில் இது பற்றிக் கூறப்பட்டிருந்ததுடன், MacOS இயங்குதள இற்றைப்படுத்தல்களில், குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இது தற்செயலானதொன்றாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அப்பிளின் ஐபோன் 7 வெளியீட்டின்போதும், வெளியிடப்பட முன்னரே, டுவிட்டரில் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. எனவே இதை ஒரு உத்தியாக அப்பிள் கையாளுகிறது போலும்.

2015ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர், தனது MacBook Pro மடிக்கணினிகளை அப்பிள் இற்றைப்படுத்தவில்லை. இது அதன் விற்பனைகளைப் பாதித்திருந்தது. கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடைந்த 12 மாதங்களில், முன்னைய 12 மாதங்களை விட 10 சதவீதம் குறைவான Macகளையே விற்றதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், தனது பெரும்பகுதி வருமானத்துக்கு காரணமான ஐபோன்களில் கவனஞ் செலுத்திக் கொண்டிருந்த அப்பிள், குறித்த புதிய MacBook Pro கணினிகள் வெளியாகியுள்ளன. எவ்வாறெனினும், MacBook அல்லது MacBook Air மடிக்கணினிகள் அல்லது அப்பிளின் iMac அல்லது Mac Pro தனியார் கணினிகள் இற்றைப்படுத்தப்படவில்லை.   

புதிய MacBook Pro ஆனது முழுமையாக உலோகத்தால் ஆக்கப்பட்டதுடன், மிகவும் மெல்லியதும் பாரம் குறைவானதும் ஆகும். 13 அங்குல MacBook Pro ஆனது 14.9 மில்லிமீற்றர் தடிப்புடையதுடன், முன்னைய பதிப்பை விட 17 சதவீதம் மெல்லியதென்பதுடன் 23 சதவீதம் பாரம் குறைந்தது. 15 அங்குல MacBook Pro ஆனது 15.5 மில்லிமீற்றர் தடிப்பையே கொண்டு, முன்னைய பதிப்பை விட 14 சதவீதம் மெல்லியது என்பதுடன், 20 சதவீதம் நிறை குறைவானது.

MacBook Proவில் உள்ள Touch IDயில் விரலடையாளத்தை பதிப்பதன் மூலம் விரைவாக உட்செல்ல முடியும் என்பதுடன், கணக்குகளை மாற்ற முடிவதுடன், Apple Payயில் பாதுகாப்பாக கொள்ளவுகளை மேற்கொள்ள முடியும். இதேவேளை, புதிய MacBook Pro ஆனது, அப்பிளின் மிகவும் வர்ணமயமான திரையை வழங்குகிறது. புதிய MacBook Pro ஆனது முன்னைய பதிப்பினை விட 67 சதவீதம் பிரகாசமானது என்பதுடன், முன்னரை விட 30 சதவீதம் குறைவான சக்தியையே எடுக்கிறது. இதுதவிர, சிறப்பான பெறுபேறுகளை வழங்குவதற்காக, ஆறாவது தலைமுறை dual-core Core i5 உடன் eDRAM, dual-core Core i7  உடன் eDRAM, quad-core Core i7 Intel processorsகளை MacBook Pro கொண்டிருக்கிறது.

2.0 GHz dual-core Intel Core i5 processor, 8GB of நினைவகம், 256GB சேமிப்பகத்தைக் கொண்ட 13 அங்குல MacBook Proவின் விலை 1,499 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்பதுடன், Touch Bar, Touch IDயுடன் கூடிய 2.9 GHz dual-core Intel Core i5 processor, 8GB நினைவகம், 256GB சேமிப்பகத்தைக் கொண்ட 13 அங்குல MacBook Proவின் விலை 1,799 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்பதுடன், Touch Bar, Touch IDயுடன் கூடிய 2.6 GHz quad-core Intel Core i7 processor, 16GB of நினைவகம், 256GB சேமிப்பகத்தைக் கொண்ட 15 அங்குல MacBook Proவின் விலை 2,399 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .