Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
Java plug-in மென்பொருளின் இற்றைப்படுத்தலில் உள்ள ஒரு குறைபாடு காரணமாக மில்லியன் கணக்கான Java பயனர்கள், malwareக்கு வெளிப்படுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Java, programming languageஇல் எழுதப்பட்டு செயற்படும் சிறிய programகள் தொழிற்படுவதுக்காக, பல கணனிகளில் Java plug-in நிறுவப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே, Java plug-inஐ விநியோகிக்கும் Oracle நிறுவனமானது, தனது சமூக வலைத்தளத்திலும், தனது இணையத்திலும் எச்சரிக்கையை வெளியிட ஒத்துக் கொண்டிருந்தது.
இவ்வாறு, தனது இணையத்தளத்திலும், தனது சமூக வலைதளத்திலும் எச்சரிக்கையை வெளியிடுவதால், அபராதம் விதிக்கப்படுவதிலிருந்து Oracle நிறுவனம் தப்பித்துள்ளது. எனினும் தாம் பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டோம் என Oracle நிறுவனமானது ஒத்துக் கொண்டிருக்கவில்லை.
Java plug-inஇல் ஏற்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக, ஹக்கர்கள், malwareஐ உள்நுழைத்து, பயனர் பெயரினையும் நிதிக் கணக்குகளின் கடவுச் சொல்லை பெறக்கூடியதாக இருந்ததுடன், முக்கியமான தகவல்களையும் எடுக்கக் கூடியதாக இருந்தது.
பிரதானமாக, இற்றைப்படுத்தல் செயன்முறையின் போது, மென்பொருளின் முன்னைய பதிப்புக்களை அழிக்காமை காரணமாகவே, அதனைக் குறிவைக்கும் ஹக்கர்கள், தரவு மீறல்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
தற்போது, அண்ணளவாக, 850 மில்லியன் கணனிகளில் Java plug-in நிறுவப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago