Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருட ஆரம்பத்தில் வெளியான HTC One M9 திறன்பேசி தோல்வியில் முடிவடைந்த நிலையில், உடனடியாக அடுத்த திறன்பேசியை வெளியிடவேண்டிய நிலைக்குள்ளான தாய்வானிய நிறுவனமானது செவ்வாய்க்கிழமை (20) HTC One A9 எனும் புதிய திறன்பேசியை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய HTC One A9 திறன்பேசியானது 5 அங்குல தொடுதிரையை கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் கொண்டுளது. இது, Qualcomm Snapdragon 617 octa-core chip ஐ கொண்டிருப்பதுடன், 2150 mAh மின் கலத்தையும் கொண்டமைந்துள்ளது. இந்தத் திறன்பேசியில் Wi-Fi மூலமாக இணையத்தைப் பயன்படுத்தும்போது 9 மணித்தியாலம் வரை உபயோகிக்க முடியும் என HTC தெரிவித்துள்ளது.
இந்தத் திறன்பேசியானது 16GB மற்றும் 32GB நினைவகங்களில் கிடைக்கிறது. இவை முறையே 2GB, 3GB RAM ஐ கொண்டு அமையவுள்ளது. இதில், 3GB RAM ஐயும் 32GB நினைவகத்தையும் கொண்டமைந்த திறன்பேசியின் விலை 399.99 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திறன்பேசியின் தோற்றம் அப்பிளின் ஐபோன் 6s போன்றே காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
தவிர இந்தப் புதிய திறன்பேசி 13 மெகாபிக்ஸல், 2.0 குவியத்தைக் கொண்ட கமெராவைக் கொண்டமைந்துள்ளது. இந்தக் கமெராவில் 4K காணொளியை எடுக்கக்கூடிய வசதி இல்லாவிட்டாலும் 1080p தெளிவில் காணொளிகளை எடுக்க முடியும்.
இந்தப் புதிய திறன்பேசியே அன்ட்ரொய்ட் இயங்குதளத்தின் 6வது மார்ஷ்மலோவை முதன்முதலாகக் கொண்டமையவுள்ளது. அலைபேசிச் சேவை வழங்குனர்களுடன் ஒப்பந்தமின்றி தனியாக வாங்கப்படும் HTC One A9 திறன்பேசிகளுக்கு, கூகிளினுடைய நெக்ஸஸ் திறன்பேசிகளில் புதிய மார்ஷ்மலோ இயங்குதளம் கிடைத்து 15 நாட்களில் கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago