2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

Facetime, iMessageக்கு நெருக்கடி: போராடுகிறது அப்பிள்

Shanmugan Murugavel   / 2016 மே 29 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்ப ஜாம்பவானான அப்பிளின் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காப்புரிமையை வழங்குகின்ற நிறுவனமொன்று, அப்பிளினது Facetime, iMessage சேவைகளை இடைநிறுத்துமாறு அப்பிளுக்கு நெருக்கடி கொடுக்க  எதிர்பார்த்துள்ளது.

VirentX என்ற குறிப்பிட்ட நிறுவனத்தின் காப்புரிமைகளில் நான்கை அப்பிள் வேண்டுமென்றே மீறியதாக கண்டுபிடித்த நீதிபதிகள் குழுவொன்று 625 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை VirentX நிறுவனத்துக்கு கடந்த பெப்ரவரி மாதம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், தற்போது மேலதிக சேதங்களை எதிர்பார்த்துள்ள, டெக்ஸாஸை தளமாகக் கொண்ட மேற்படி நிறுவனமானது, காணொளி மற்றும் எழுத்துக்களிலான அரட்டைச் செயலிகளில் தனது தொழில்நுட்பங்களைக் பயன்படுத்துவதிலிருந்து அப்பிள் தடை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வழக்கில் போராடுகின்ற அப்பிள், கண்டுபிடிப்புகளுக்கான VirentX நிறுவனத்தின் கோரிக்கைகளை, ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் வணிகக் குறியீடு அலுவலகம் செல்லுபடியற்றதாக்கியுள்ள நிலையில், தீர்ப்பை இல்லாமற் செய்யுமாறு அப்பிள் கோரியுள்ளது.

எனினும் VirentX நிறுவனத்தின் கோரிக்கைகளை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் வணிகக் குறியீடு அலுவலகத்தினால் செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளமை, உச்ச நீதிமன்றத்தில் பிறிதொரு வழக்கின் மூலம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .