2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

Dell Systems unitஐ வாங்குகின்றது ஜப்பானின் NTT Data

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 31 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட அமெரிக்காவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ள ஜப்பானின் NTT Data ஆனது Dellஇன் தொழில்நுட்ப சேவைகளை மூன்று பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு அதிகமான தொகைக்கு வாங்கவுள்ளது.

முன்னொரு காலத்தில் ஜப்பானின் அலைபேசிகளில் ஆதிக்கம் செலுத்திய NTT Data இன் வரலாற்றில் மிகப் பெரிய கையப்படுத்தலாக, Dellஇன் தொழில்நுட்ப சேவைகளை  வாங்குவது விளங்கும் எனக் கூறப்படுகிறது.

தரவு சேமிப்பக நிறுவனமான EMC நிறுவனத்தை 67 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்கவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னராக, முக்கியமில்லாத தனது சொத்துக்களை விற்று. பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்களை சேகரிக்க Dell எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NTT Data ஆனது, வட அமெரிக்காவிலும் இந்தியாவிலுமுள்ள Dell-இன் 28,000 பணியாளர்களை தனதாக்கவுள்ளது. மேற்படி கையகப்படுத்தல் மூலம், தனது, cloud, business-process outsourcing (BPO) சேவைகள் முன்னேற்றமடையும் என NTT Data தெரிவித்துள்ளது.

ஜப்பானின் சனத்தொகையானது குறைவடைந்து வரும் நிலையிலும் இருக்கின்ற சனத்தொகையிலும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானுக்கு வெளியே, வருமானமீட்டும் மூலங்களை NTT Data தேடுகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து 72 பில்லியன் யென்களுக்கு அதிகமாக, வெளிநாட்டு நிறுவனங்களை NTT Data வாங்கியுள்ளது. NTT Dataவின் பிரதான போட்டியாளர்களாக இந்தியாவின் Tata Consultancy சேவைகளும் பிரான்ஸின் Atosஉம் ஐக்கிய அமெரிக்க நிறுவனமான Cognizant Technology Solutionsனும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .