2024 நவம்பர் 02, சனிக்கிழமை

Candy Crush தயாரிப்பாளரை வாங்கியது Activision Blizzard

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 04 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

World of Warcraft , Call of Duty கணினி விளையாட்டுக்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான Activision Blizzard, பிரபல அலைபேசி விளையாட்டான Candy Crush Sagaவை உருவாக்கிய King Digital Entertainment நிறுவனத்தை 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.

King Digital Entertainment நிறுவனத்தை இணைத்ததன் மூலம், அலைபேசி, வீடியோ கேம் சாதன, கணினி விளையாட்டு உலக முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளதாக Activision Blizzard நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை King Digital Entertainment நிறுவனத்தை தம்முடன் இணைத்ததன் மூலம், உலகளாவிய ரீதியில் 196 நாடுகளில், அரை பில்லியனுக்கு மேற்பட்ட மாதாந்த இயங்குநிலை பாவனையாளர்களைக் கொண்டிருப்பதாக Activision Blizzard நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

உலகில் அதிகம் விற்பனையான வீடியோ கேம் சாதன விளையாட்டாக, The Call of Duty தொடர் விளக்குவதுடன், அலைபேசிகளில் மிகப் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாக Candy Crush Saga விளங்குகின்றது.

இதேவேளை, அலைபேசியிலும் பேஸ்புக்கிலும் பெரிய அளவிலான பயனர்களை Candy Crush Sagaவே கொண்டிருப்பதாகவும் முடிவடைந்த இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் 474 மில்லியன் இயங்குநிலை பயனர்களைக் கொண்டிருப்பதாக Candy Crush Saga இன் ரிக்கார்டோ ஸக்கோணி தெரிவித்தார். இதில் சுவாரஷ்யமான தரவு என்னவெனில், Candy Crush Saga விளையாடுவோரில் 60 சதவீதமானோர் பெண்களாவர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .