Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது திறன்பேசிகளை பரிசுகளாக பெறவுள்ள வாடிக்கையாளர்களை இலக்குவைத்துள்ள அலைபேசி செயலித் தயாரிப்பாளர்கள், தமது செயலிகளின் விலைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29), வரை குறைத்துள்ளனர்.
இந்நிலையில், App Santa எனப்படும் சிறந்த விலைக்குறைப்பை, iOS மற்றும் Mac App Storeஇல் பிரபலமாக இருக்கும் செயலிகளின், சுயாதீன தயாரிப்பாளர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (22), அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேற்படி App Santaவில், Launch Center Pro, Star Walk, PCalc, Day One, Clear, Tweetbot, Scanner Pro, Drafts 4 உட்பட வேறு சில செயலிகள் காணப்படுவதுடன், இவற்றுக்கு 80 சதவீதம் வரை விலைக்கழிப்பு வழங்கப்படுவதுடன், இந்த விலைக் கழிப்பானது நாளை மறுதினம் சனிக்கிழமை (26) வரை நீடிக்கவுள்ளது.
இவற்றில் மிகச் சிறந்த வடிவமைப்பை உடைய கட்டணம் செலுத்தப்படும் பத்து வரையான செயலிகள் காணப்படுவதுடன், சில செயலிகளை வாங்கும்போது உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று அமெரிக்க டொலர்களையே சேமிக்க கூடிய வகையில் இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் ஐந்து அல்லது ஆறு அமெரிக்க டொலர்களையும் சேமிக்கக் கூடிய வகையில் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .