Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நிலையில், iPhone 7 இன் பிரதான மாற்றமாக, iPhoneகளில் இதுவரை இருந்து வந்த, தலைப்பன்னி செருகப்படும் பகுதி இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், iPhoneஐ மின்னேற்றிக் கொள்ளும் பகுதியான Lightning Port மூலமே தலைப்பன்னியை செருகவேண்டும். இதேவேளை, வேறு தலைப்பன்னிகளை சொருகுவதற்காக, 3.5mm தலைப்பன்னி jack adapterஉம் , iPhone 7 உடன் வருகிறது.
இது தவிர, அப்பிளின் புதிய கம்பியில்லாத தலைப்பன்னியான Air Podsஉம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எட்டு கிராமே ஆன பொருளுக்காக 159 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவளிக்க நீங்கள் தயாராக இருந்தால் இதை நீங்கள் வாங்கலாம்.
Air Podsகளில் ஒலியை வெளிப்படுத்துவதற்கும் பெறுவதற்கும் அதனுள்ள W1 Chip காணப்படுகிறது. இதில், Bluetooth மூலமே, சாதனங்களிலிருந்து ஒலி கடத்தப்படவுள்ளது. எவ்வாறெனினும் இதை அப்பிள் சாதனங்களுக்கு மட்டுமா பயன்படுத்தலாமா அல்லது வேறு சாதனங்களுக்கும் பயன்படுத்தலாமா என்பது தெளிவில்லாமல் உள்ளது.
குறித்த Air Podsகளை iPhone உடன் இணைத்துக் கொள்வதன் மூலம், குறித்த Apple IDஐ பயன்படுத்துகின்ற அனைத்து அப்பிள் சாதனங்களிலும் Air Pods தானாகவே இணைந்து கொள்ளும். இதன் மூலம், Mac, iPhone, iPad, Apple Watch ஆகிவற்றில் இலகுவாக பயன்படுத்த முடியும்.
Air Podsகளை முழுமையாக ஒரு தடவை மின்னேற்றியதன் பின்னர், அவற்றை ஐந்து மணித்தியாலங்கள் பாவிக்கலாம் என்பதோடு, Air Podsஐ உறையியில் இடுவதன் மூலம் மேலதிக மின்னைப் பெற்றுக் கொள்ளலலாம். உறையியில் இடுவதன் மூலம், ஏற்கெனவே இருக்கும் சக்தியை இரண்டு மடங்காக்கிக் கொள்ளலாம். 15 நிமிடங்கள் மின்னேற்றுவதன் மூலம் மூன்று மணித்தியாலத்துக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர, உறையியானது 24 மணித்தியாலத்துக்கு தேவையான சக்தியை வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, Air Podsகளில் காணப்படும் உணரிகள் காரணமாக, காதுகளில் Air Pods இருக்கும்போது மட்டுமே அவை தொழிற்படும். இதன் காரணமாக, Air Podsகளின் மின்கல ஆயுட்காலம் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அதிலிருக்கும் ஒலிவாங்கியும், நீங்கள் கதைக்கும்போது மட்டுமே தொழிற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, நீங்கள் இரண்டு தடவை Air Podsகளை தொடுவதன் மூலம் Siriஐயும் தொழிற்படுத்திக் கொள்ள முடியும்.
அடுத்த மாத இறுதி முதல் Air Pods சந்தைக்கு வரவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
2 hours ago