2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியக் குடும்பத்துக்கு வெளியே தற்போது 715 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது. புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப்பட்ட கெப்ளர் தொலைநோக்கி,  இந்த 715 புதிய கோள்களைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது.

கெப்ளர் தொலைநோக்கி புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடலில் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

'மனிதர்களுக்குத் தெரிந்த கோள்களின் எண்ணிக்கை இன்று இரு மடங்காகியிருக்கிறது. 305 வௌ;வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது' என நாசா ஆய்வாளர் லிஸ்ஸாயர் கூறியுள்ளார்.

புதிய கோள்கள் கண்டறியப் பட்டாலும், இக்கோள்களின் கூட்டுப் பொருள்கள் (அல்லது எவற்றையெல்லாம் உள்ளடக்கி யவை) என்பது குறித்த அதிக விவரங்கள் தெரியவில்லை. கடினமான தரை, நீர், அவை சுற்றி வரும் நட்சத்திரங்களிலிருந்து அவற்றின் தொலைவு, உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்து அறியப்படவில்லை.

அந்தக் கோள்கள் அதிக வெப்ப முடையவையா, கடும் குளிர் நிலவும் பிரதேசமா என்பன போன்ற விவரங்களும் அறியப்படவில்லை. ஆனால், தங்கள் நட்சத்திரங்களை அவை பலமுறை கடப்பதை வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த புதிய கோள்கள் அனைத் தும் கெப்ளர் நிறுவப்பட்ட 2009 மார்ச் முதல் 2011 வரையிலான காலகட்டங்களில் கண்டறியப்பட் டவை. புதிய பகுப்பாய்வு முறையின் மூலம் அவை கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் வரும் மார்ச் 10 ஆம் திகதி வெளிவரவுள்ள ஆய்விதழில் வெளியிடப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0

  • poiyo Saturday, 29 March 2014 06:11 AM

    இறைவன் லட்சக் கணக்கான கோள்களையும் நட்சட்திரங்களையும் படைத்துள்ளதாக கூறுகிறான். இந்த நாசா வெறுமனே சில நட்சத்திரங்களை கண்டுவிட்டு உடனே அறிக்கை விடுவாங்க. சில நாட்களின் பின்பு இதை மறந்தே விடுவாங்க. நம்புகிறவன் இருக்கும்வரை அறிக்கை விடலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .