2024 நவம்பர் 02, சனிக்கிழமை

அன்ரோய்ட் 5.0 லொலிபொப் பதிப்பை புதுப்பித்துவிட்டீர்களா?

George   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜோர்ஜ்

இன்றைய நாட்களில் ஸ்மாரட் போன் என்பது வாழ்க்கையில் தவிர்கமுடியாத ஒன்றாக மாறிவரும் நிலையில் அன்ரோட்ய்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் தற்போது முன்னிலை வகிக்கின்றன.
 
அன்ரோட்ய்ட் தொழில்நுட்பமானது ஸ்மார்போன் பாவனையை இலகுவாக்கியதுடன் ஸ்மாரட் போன்களின் வளர்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
 
இணைய உலகின் ஜாம்பவானாக திகழும் கூகுல் நிறுவனத்தின் வெளியீடான அன்ரோய்ட் மென்பொருளானது காலத்துக்கு காலம் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதுடன் ஸ்மாரட் போன் பாவனையாளர்களின் நன்மைகளையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அப்டேட் (பதிப்பு) செய்யப்பட்டு வருகின்றது.
 
தற்போது அன்ரோய்ட் மென்பொருளின் புதிய பதிப்பாக அன்ரோய்ட் 5.0 லொலிபொப்பினை கூகுல் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
தற்போது காணப்படும் அன்ரோய் மென்பொருள் மெருகூட்டப்பட்டு புதிய வசதிகள் அறிமுகத்துடன் புதிய தோற்றத்தில் இந்த பதிப்பினை கூகுல் வெளியிட்டுள்ளது.
 
கூகுல் நிறுவனத்தின் வெளியீடான Nexus ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்டுகளில் இந்த புதிய அன்ராய்ட் பதிப்பினை புதுப்பித்துக்கொள்ள முடியும்.
 
லொலிபொப் பதிப்பானது சகலவிதமான ஸ்மார்ட் போன்கள், டெப்லட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள் என்பவற்றிற்கு உகந்த முறையில் வடிவடைக்கப்பட்டுள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது.
 
அதுமாத்திமின்றி இந்த அன்ரோய்ட் லொலிபொப் பதிப்பானது தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளமை கூடுதல் தகவல்.
 
எங்க போறிங்க? அன்ரோய்ட் லொலிபொப் பதிப்பை அப்டேட் செய்யவா...
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .