2024 நவம்பர் 02, சனிக்கிழமை

3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வின்டோஸ் 8 இயங்குதளம் - 3 வகையான பதிப்புக்களைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது "பீற்றா" நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் வின்டோஸ் 8 இயங்கு தளம், அது வெளியிடப்படும் போதே இந்த 3 வகையான பதிப்புகளைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ளதன்படி வின்டோஸ் 8 இயங்குதளம் வின்டோஸ் 8, வின்டோஸ் புரோ, வின்டோஸ் ஆர்.ரி. ஆகிய 3 வகையான பதிப்புக்கள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து வகையானப் பதிப்புக்களும் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புக்களில் கிடைக்கப் பெறும்.

வின்டோஸ் 8 என்ற வகையான பதிப்பு மேம்படுத்தப்பட்ட வின்டோஸ் எக்ஸ்புளோரர், மேம்படுத்தப்பட்ட டாஸ்க் மனேஜர், மேம்படுத்தப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளுக்கான வசதி, உடனடியாக மொழிகளை மாற்றக்கூடிய வசதி ஆகியன காணப்படுகின்றன.

வின்டோஸ் 8 புரோ வடிவம் தொழிநுட்பப் பகுதியைச் சார்ந்தவர்களுக்கும், வியாபாரப் பகுதியைச் சார்ந்தவர்களையும் இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வின்டோஸ் 8 பதிப்பில் உள்ள அத்தனை வசதிகளோடு, மேலும் புதிய வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன. இணையம், வலையமைப்பு, சுருக்குதல், கணினி முகாமைத்துவம் ஆகிய அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வின்டோஸ் 8 புரோ பதிப்பில் வழங்கப்படவுள்ளன.

வின்டோஸ் ஆர்.ரி. வடிவம் அல்லது வின்டோஸ் ஏ.ஆர்.எம். அல்லது வின்டோஸ் டபிள்யூ.ஓ.ஏ. என்ற வடிவம் புதிய ஒரு வடிவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவம் கணினியோடு இணைந்து நிறுவி மாத்திரமே வழங்கப்படவுள்ளது. கணினிகள் தவிர, டம்லட்களிலும் இவை நிறுவி வழங்கப்படவுள்ளன. இவை அதிக நேரம் பற்றரிகளைப் பயன்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வின்டோஸ் 8 இயங்குதளம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் திகதி தொடர்பாக பெரியளவிலான எதிர்பார்ப்பு நிலவுகின்றது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0

  • siva Wednesday, 02 January 2013 03:08 PM

    அது என்ன விலை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .