2024 நவம்பர் 02, சனிக்கிழமை

3டி தொழில்நுட்பத்தில் நவீன ஆளில்லா விமானம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ஈஸ்டர் என்ற பொருளியல் மாணவரொருவர், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் பிளாஸ்டிக்கினாலான ஆளில்லா விமானமொன்றை உருவாக்கியுள்ளார்.

இதற்கான ஆலோசனைகளை அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழக இயந்திரவியல் மற்றும் விண்வெளி பொருளியல் முன்னாள் பேராசிரியர் டேவிட் ஷெப்லர் வழங்கியுள்ளார்.

இந்த விமானமானது, கெஸ்விக் அருகே உள்ள மில்டன் விமானத்தளத்தில் 4 முறை பரிசோதனை செய்யப்பட்டது. இவ்விமானம், மணிக்கு 72.4 கிலோமீற்றர் வேகத்தில் பறப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்டிக் டர்பன் என்ஜினை (விசைச்சுழலி இயந்திரம்) வடிவமைத்தது. அதுகுறித்த தகவல்கள் படத்துடன் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதைப் பார்த்த மிட்ரீ கோர்ப்பரேசன் நிறுவன அதிகாரிகள் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் 2 புதிய திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக பொருளியல் கல்லூரிகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டனர்.

அதையடுத்து ஸ்டீவன் ஈஸ்டர் என்ற பொருளியல் மாணவன், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் ஆளில்லா விமானம் தயாரிக்க முன்வந்தார். எனவே அப்பணி அவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்தே குறித்த விமானம் தயாரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .