2024 நவம்பர் 02, சனிக்கிழமை

2880 இல் உலகம் அழிந்துவிடும் : அமெரிக்க விஞ்ஞானிகள்

George   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2880 ஆண்டில் அதாவது இன்னும் 866 ஆண்டுகளில் உலகம் முற்றிலும் அழிந்து விடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆய்வு கட்டுரை பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய இராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது.

அதற்கு  1950 டி,ஏ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகாடன் எடையும் 1 கிலோமீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளதுடன் வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கல் 2,880 ஆம் ஆண்டில் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் என கணித்துள்ளனர்.
 
இதனால் பூமி பயங்கர சத்தத்துடன் வெடிப்பதுடன் தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படும். அதன் மூலம் மனித குலம் அழியும் என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விண்கல் பூமியின் மேல் மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுவதுடன் பூமியில் மோதுவதில் 300 இல் ஒரு வாய்ப்பு தான் உள்ளது எனவும் என மற்றொரு தரப்பினர் கூறியுள்ளதாக இந்த கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் காலத்துக்கு காலம் உலகம் அழிந்துவிடும் என வதந்திகள் பரவி பின்னர் ஒன்றுமில்லாமல் போவது சகஜமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • m.ananthan Wednesday, 03 September 2014 06:17 PM

    Ethu unmaiya poiya anru angalukku thireyanum hathuthan ankalkaruthu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .