2024 நவம்பர் 02, சனிக்கிழமை

முகப்புத்தகத்தில் கொட்டும் பணம்

Gavitha   / 2015 மார்ச் 19 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்கள், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மறக்கவோ மாற்றவோ முடியாத அம்சமாக மாறிவருவதை எவரும் மறுக்க முடியாது

விரல் நுனியில் தகவல்களை தரக்கூடிய இணையத்தின் முன்னால் பலர் பலமணிநேரம் அடிமைப்பட்டு கிடப்பதும் தற்போது அதிகரித்துள்ளது.

நாள்முழுவதும் இணையத்தில் குறிப்பாக முகப்புத்தகத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்று சிலர் குறை கூறினால் முகப்புத்தகம் தரும் வசதிகள் தொடர்ந்தும் முகப்புத்தகத்தில் மூழ்கி இருப்பதற்கு வழிகோலியுள்ளது.

வங்கிக்கு சென்று பணபரிமாற்றம் செய்தவர்கள், இணைய வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்தவர்கள் இனி அங்குமிங்கும் அலையாமல் முகப்புத்தகத்தின் ஊாடாகவே பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆச்சரியமடைவீர்களா?

கடந்த 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான வலைத்தளம் என்ற பெயரை முகப்புத்தகம் (பேஸ்புக்) பெற்றுக்கொண்டுள்ளது.

முகப்புத்தகத்தை பயன்படுத்தும் எவராக இருந்தாலும் அதிலுள்ள அப்ஸ்களை பயன்படுத்தியிருப்பர். காரணம் இதில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து அப்ஸ்களிலும் ஏதேனுமொரு நல்லவிடயம் அடங்கியிருக்கும்.

அவ்வாறு தற்போது, புதியதொரு அப்ஸை முகப்புத்தகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மணிஓர்டரில் ஆரம்பித்து ஈ-கேஷ் வரை வந்துள்ள  பணமாற்று முறையை தற்போது முகப்புத்தகத்திலும் பயன்படுத்தமுடியும்.

இந்த அப்ஸ், முதல் முதலாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முகப்புத்தகத்தில் ஒரு அப்ஸ்ஸாக காணப்படும் மெசெஜ்சரிலேயே, இந்த தெரிவு காணப்படவுள்ளது. முகப்புத்தக மெசெஜ்சர் சேவையில் ஸ்டிக்கர் அனுப்பும் பட்டனுக்கு அருகில் '$' என்ற பட்டன் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த பட்டனை அழுத்தி, வாடிக்கையாளரது டெபிட் கார்ட் அட்டை இலக்கத்தை பதிவு செய்து அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் வாடிக்கையாளர்கள் அதில் குறிப்பிடும் பணத்தொகை விரைவில் உரிய நபருக்கு பரிமாற்றம் செய்யப்படும். சிலவேளைகளில் வாடிக்கையாளர்களின் கணக்கைப்பொருத்து இதற்கு சற்று காலம் எடுக்கக்கூடும்.

வாடிக்கையாளர்களின் கணக்கையும் அடையாள எண்ணையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அதற்கென அங்கிகரிக்கப்பட்ட பாதுகாப்புகளையும் அதில் மேற்கொள்ள முடியும். மேலும் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க முகப்புத்த நிறுவனம் எதிர்ப்பு மோசடி நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளது.

தரம் வாய்ந்த சேவையாக இருக்கும் இந்த சேவையை ஆப்பிள், ஆன்ட்ராய்ட், கணினி என்று அனைத்திலும் உபயோகப்படுத்தலாம் என்று முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Joshua R sam Thursday, 19 March 2015 01:33 PM

    very nice

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .