2024 நவம்பர் 02, சனிக்கிழமை

அப்ஸ் லொக்குக்கும் ஆப்பு!

George   / 2014 நவம்பர் 16 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


அலுவலகம், நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள், என... நமது அலைபேசியை யார் எப்போது எடுத்து எதைப் பார்ப்பார்கள் என்று தவித்துக்கொண்டே இருப்பவர்கள் பலர். அதற்கான தீர்வு தான் அப்ஸ் லொக் என்ற பாதுகாப்பு செயலி. மொத்தமாக போனை லொக் செய்வதற்கும், அப்ஸ் லொக் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அப்ஸ் லொக்கை நமது அலைபேசியில்; இன்ஸ்டோல் செய்து பயன்படுத்தும்போது, நம் போனில் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் அல்லது பயன்படுத்த கூடாது என்று நினைப்பவற்றை எல்லாம் லொக் செய்துவிடலாம்.

சாதாரண பாதுகாப்பு செயலிதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நமது அலைபேசியில் இருக்கும் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விடயமல்லவா?.

இந்த அப்ஸினை,https://play.google.com/store/apps/details?id=com.domobile.applock&hl=en  எனும் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அப்ஸினை பதிவிறக்கம் செய்தபின், அதில் சென்று பார்த்தால் நமது அலைபேசியில் இருக்கும் எல்லாவற்றையும் லொக் செய்வதற்கான ஒப்ஷன் கேட்கும்.

இதில் நமக்குத் தேவையானதை லொக் செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் ஒரே கடவுசொல்தான். இதனால் நமது அலைபேசியில் கேம்ஸ், படங்கள், குறுஞ்செய்தி என எதை பிரவுஸிங் செய்தாலும கடவுசொல் இன்றி  அதனை மற்றவர்களால் பயன்படுத்த முடியாது.

சரி, அப்போது இந்த அப்ஸை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டோல் செய்துவிட்டோம். இனி நம் அலைபேசியில் சேமித்துள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்றால், அதற்கு பதில் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

ஏனன்றால் செக்யூரிட்டி ஆப்ஸுக்கும் இருக்கிறது ஆப்பு! பொதுவாக, இந்த அப்ஸை பயன்படுத்துபவர்கள் தங்களின் அலைபேசியில்; இருக்கும் எல்லாவற்றையும் லொக் செய்து வைப்பார்கள். ஆனால், செட்டிங்ஸை லொக் செய்யத் தவறி விடுவார்கள்.

செட்டிங்ஸ்ல நம்மைப் பற்றிய விஷயங்கள் என்ன இருக்க போகுது? அப்பப்போ செட்டிங்ஸ்ல ஏதாவது வேலை இருந்து போனா, கடவுசொல் கேட்டு எரிச்சலாக்கும். அதனால செட்டிங்ஸுக்கு எதுக்கு லொக்? என்று பலரும் அதைச் செய்வதில்லை.

ஆனால், இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. இதை கிரிமினல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்வார்கள்.

நாம் செட்டிங்ஸை லாக் செய்யவில்லை என்றால், நமது போன் பிறரின் கைக்குக் கிடைக்கும்பட்சத்தில், செட்டிங்ஸுக்கு சென்று, அதில் அப்ஸ் என்பதில் சென்றால், நமது போனில் இருக்கும் அனைத்து அப்ஸ்களும் வரும். அதில் அப்ஸ் லொக் செய்யப்பட்ட அப்ஸ்களும் வரும்.

அதை க்ளிக் செய்தால், FORCE STOP, UNINSTALL  என்று இரண்டு ஒப்ஷன்கள் இருக்கும். இதில் FORCE STOP என்பதை கிளிக் செய்துவிட்டால், அப் லொக் மூலம் கொடுத்து இருக்கும் அனைத்து லொக்குகளும் அன்லொக் ஆகிவிடும். மேலும் அப் லொக் செயல்படாது.

இவ்வாறு அன்லொக் செய்த பின், நமது அனைத்து தகவல்களையும் பிறரால் பார்க்கவும், பயன்படுத்தவும் முடியும்.

அப் லொக் பயன்படுத்தியும் தகவல்கள் எப்படி வெளியே சென்றன என்று இத்தனை நாட்களாகக் குழம்பியவர்களுக்கு, இப்போது விடை தெரிந்ததா?.

அப்போ, அப் லொக்குடன் செட்டிங்ஸையும் லொக் செய்துவிட்டால் வீடோ, அலுவலகமோ... இனி, போனை பயம் இல்லாமல் வைத்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்தானே?.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .