2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

முதல்முறையாக வால் நட்சத்திரத்தில் இறங்கிய ஃபிலே

Sudharshini   / 2014 நவம்பர் 13 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட ரோசெட்டா விண்கலத்தில் இருந்து ஃபிலே என்ற லேண்டர் 67பிஃசுரிமோவ்-கெரசிமென்கா என்ற வால் நட்சத்திரத்தில் புதன்கிழமை(12)  வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

வால் நட்டசத்திரங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் கடந்த 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திததி ரோசெட்டா விண்கலத்தை விண்ணில் ஏவியது. அதில் ஃபிலே என்ற 100 கிலோ எடையுள்ள லேண்டர் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விண்கலம் ரூபாய் 9 ஆயிரத்து 600 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. 67பி என்ற வால் நட்சத்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரோசெட்டா 10 ஆண்டுகளாக 6.4 பில்லியன் மைல் தொலைவு பயணம் செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் வால் நட்சத்திரத்தை அடைந்தது.

இதையடுத்து, ரோசெட்டாவில் இணைக்கப்பட்ட ஃபிலே லேண்டர் புதன்கிழமை (12) காலை 3.30 மணியளவில், விண்கலத்திலிருந்து  பிரிந்து வால் நட்சத்திரத்தில் தரையிறங்கத் தயாரானது. ரோசெட்டாவிலிருந்து பிரிந்து 7 மணிநேரம் கழித்து மாலை 4.03 மணிக்கு ஃபிலே வால் நட்சத்திரத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

 வால் நட்சத்திரத்தில் பூமியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு கலம் தரையிறங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

67பி வால் நட்சத்திரம் பூமியில் இருந்து 500 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் தற்போது உள்ளது. ஃபிலே லேண்டர் வால் நட்சத்திரத்தில் 9 வகை ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .