2024 நவம்பர் 02, சனிக்கிழமை

பூமியை கடந்து சென்ற விண்கல்; நாசா தகவல்

George   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்டிராய்ட் எனப்படும் சிறிய வகை விண்கல் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை (7) பூமியைக் கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

60 அடி நீளம் கொண்டதாக இருந்த இந்த விண்கல், 2014 ஆர்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சிறிய விண்கல் நியூசிலாந்துக்கு மேலே பூமியிலிருந்து 40,000 கிலோமீட்டர் உயரத்தில் பூமியைக் கடந்துள்ளது.

ஆனால், இந்த விண்கல் பூமியைக் கடந்தபோது பூமிக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. பூமியை நெருங்கி வந்த இந்த விண்கல்லை முதலில் ஓகஸ்ட 31ஆம் திகதிதான் விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.

இந்த விண்கல்லால் பூமிக்கோ அல்லது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என கூறப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .