2024 நவம்பர் 02, சனிக்கிழமை

ஆர்ஜென்டீனாவில் மிகப்பெரிய டைனோசர் எச்சம்

A.P.Mathan   / 2014 மே 18 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்ஜென்டீனாவில் மிகப் பெரிய டைனோசர்களின் எலும்புக்குகூட்டுத் தொகுதி நேற்று சனிக்கிழமை (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எச்சங்களில், இதுவே உலகில் வாழ்ந்த டைனோசர்களில் மிகவும் பெரிய டைனோசர்களின் எலும்புக்ககூட்டுத் தொகுதி என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த டைனோசர் இனத்தில் உள்ளவை ஒவ்வொன்றும் சுமார் 77 டன்கள் எடை கொண்டதாக இருந்திருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த டைனோசர்கள் ஒவ்வொன்றும் 130 அடி (40 மீற்றர்) நீளமும் 65 அடி அகலமும் உடையது என கணிப்பட்டுள்ளது. 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவர உன்னி டைனோசர்களாக இவை இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.9

இந்த மிகப்பெரிய டைனோசர் எச்சங்களை கண்டுபிடித்தமை பற்றி, ஆர்ஜன்டீனாவின் டைனோசர் ஆராய்ச்சியாளர் யோஸ் லூயிஸ் கார்பல்லிடோ கூறுகையில்,

நாங்கள் கண்டுபிடித்த டைனோசர் எச்சங்கள் மிகப்பெரியவையாகும். இவை ஒவ்வொன்றும் 2 பெரிய ட்ரக் வண்டிகளின் நீளத்தையும், 14 யானைகளின் நிறையினையும் ஒத்ததாக இருக்குமென கணிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .