2024 நவம்பர் 02, சனிக்கிழமை

பூமிக்கு அருகே மிக அபாயகரமான விண்பாறை: நாசா கண்டுபிடிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 09 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


பூமிக்கு அருகே சுற்றி; மிகவும் அபாயகரமான விண்பாறை ஒன்று சுற்றி வருவதாக அமெரிக்காவின் நாசா அனுப்பிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளி குறித்து ஆராய்வதற்காக நியோவைஸ் என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது. அந்த செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நியோவைஸ் அனுப்பிய புகைப்படம் ஒன்றில், பூமியில் இருந்து 43 மில்லியன் மைல் தூரத்தில் அபாயகரமான விண்பாறை ஒன்று சுற்றிவருவது தெரியவந்துள்ளது.

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படம் பிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • hassan Friday, 10 January 2014 06:39 PM

    நாசா கண்டுபிடிப்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .