2024 நவம்பர் 02, சனிக்கிழமை

செவ்வாய் செல்கிறது மங்கள்யான்

A.P.Mathan   / 2013 நவம்பர் 05 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமார் 4500 மில்லியன் (இந்திய) ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலமானது செவ்வாய்க்கிரகத்துக்கு பி.எஸ்.எல்.வி. சி-25 ரொக்கெட் மூலம் இன்று ஏவப்பட்டது. இந்த விண்கல முயற்சி வெற்றியா? இல்லையா என்பது 10 மாதங்களுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியது. 
 
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ரொக்கெட் இன்று செவ்வாக்கிழமை மாலை 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டு 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணைந்துகொண்டது. விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கில் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட நேரத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரேடார்கள் மூலம் பார்க்க முடியவில்லை. அது தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
 
இந்த விண்கலமானது பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசெம்பர் 1ஆம் திகதி பயணத்தை தொடங்கவுள்ளது. தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி இணையும் எனவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது 10 மாதங்களுக்குப் பின்னர்தான் செவ்வாய் கிரக பயணம் வெற்றியா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். (தட்ஸ்தமிழ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .