2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

'புதிய மினி ஐபாட்'ஐ அறிமுகப்படுத்தியது அப்பிள்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


அப்பிள் நிறுவனம் புதிய மினி ஐபாட் வகையினை நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த புதியவகை மினி ஐபாட், கலிபோர்னியாவில் வைத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த மினி ஐபாடின் விலை 269 அமெரிக்க டொலர்களாகும்.

இந்த ஐபாடின் சேவையை வை-பை தொழில்நுட்பத்தினூடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். 16 ஜீ.பீ. மெமரியை (சேமிப்பளவை) கொண்முள்ள இந்த மினி ஐபாட், 0.3 கிலோகிராம் நிறை கொண்டதாகும். அத்துடன், 7.9 அங்குல தெளிவான திரையைக் கொண்டுள்ளது. 

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் கைத்தொலைபேசிகள், மடிகணினிகள், டப்லெட்கள், ஐபாட்கள் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை மக்கள் அதிக ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களை கவர பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், கூகுள், அமேஸன் மற்றும் சம்சுங் போன்ற முன்னணி நிறுவனங்கள் மேற்கண்டவாறான மினி ஐபாட் டப்லெட் வகைகளை அறிமுகம் செய்திருந்தன. இந்நிலையிலேயே அப்பிள் நிறுவனமும் இந்த புதிய வகை மினி ஐபாடை அறிமுகம் செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .