2024 நவம்பர் 02, சனிக்கிழமை

முதல் மனிதன் தொடர்பில் சர்ச்சை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு, அண்மையில் நடத்தியுள்ள புதிய ஆய்வொன்றின் மூலம் மனித இனத்தின் மூதாதையர் (உலகின் முதல் மனிதன்) தொடர்பில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

உலகின் முதல் மனிதன் குரங்கு போன்று இருக்கவில்லை. மாறாக அணில் போன்று இருந்துள்ளான் என்று இந்த புதிய ஆய்வு குறிப்பிடுகின்றது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற புதை படிவத்தின் மூலம் இது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த புதை படிவத்தில் உள்ள உருவம்தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதற்படி என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுவே, மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் உட்கொண்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்படி ஆய்வினை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது. மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த அணில் போன்ற உயிரினம்தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த புர்கடோரியஸ் இனமானது, டைனோசர்கள் அழிந்த சில காலத்திற்குப் பின்னர் வாழ்ந்துள்ளது. அதாவது போலியோசீன் காலத்தில் இது வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலூட்டியான இந்த அணில் உருவ உயிரினம், மிகவும் சிறியதாக இருந்துள்ளது. பழுப்பு நிறத்தில் இருந்துள்ளது. நல்ல அடர்த்தியான வாலும் இதற்கு இருந்துள்ளது. இதன் மொத்த எடையானது 1.3 அவுன்ஸ்தான். நல்ல பெரிய பற்கள் இதற்கு இருந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • JAN Monday, 22 October 2012 03:50 AM

    4:1. "மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்." அல்-குரான்.

    6:2. அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்" அல்-குரான்.
    http://www.tamililquran.com

    Reply : 0       0

    JAN Monday, 22 October 2012 03:53 AM

    5:60. “அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக." -- அல் குர்ஆன் .

    7:189. "அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்." -- அல் குர்ஆன் . http://www.tamililquran.com

    Reply : 0       0

    Muhammadh Aadhil Monday, 22 October 2012 06:09 AM

    முதல் மனிதன் எப்படி இருந்தா நமக்கு என்ன?? இப்ப இருக்கிறவங்களுக்கு தேவையான ஆராய்ச்சியில ஈடுபடுங்கப்பா..!!

    Reply : 0       0

    lovenation Monday, 22 October 2012 07:50 PM

    எமது உடம்பு போன்றதே ஆனால் 60 அடி உயரம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .