2024 நவம்பர் 02, சனிக்கிழமை

வைரக்கல் கிரகம் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருபகுதி வைரத்திலான பூமியைப் போல 2 மடங்கு அளவுள்ள கிரகமொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

55 கான்கிரியெனப் பெயரிடப்பட்ட இக்கிரகத்தை பிரெஞ்சு – அமெரிக்க ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்ததென றியூட்டர் அறிக்கை தெரிவித்துள்ளது.

இக்கிரகத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் கருங்கல்லினால் மூடப்படவில்லையெனவும் இது காரீயம் மற்றும் வைரத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் ரியூட்டர் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இக்கிரகத்தின் மேற்பரப்பின் வெப்பநிலை செல்ஸியஸிலும் கூடுதலானதென ஆய்வுகள் காட்டியுள்ளன. இக்கிரகத்தின் ஆரை பூமியின் ஆரையின் 2 மடங்காகவும் திணிவு 8 மடங்காகவும் உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் முன்னரும் வைரக் கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். ஆயினும் கான்கிரி கிரகம்தான் இவ்வளவு தூரம் விளக்கமாக ஆராயப்பட்டுள்ளதென பிரெஞ்சு – அமெரிக்க ஆராய்ச்சிக்குழு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Fahim Friday, 12 October 2012 09:01 AM

    உண்மையிலே வைரமாக இருந்தால் உலகிற்கு நல்ல எதிர்காலம் உண்டு...!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .