2024 நவம்பர் 02, சனிக்கிழமை

தரவரிசையில் கூகுளை பின்னுக்கு தள்ளிய ஃபேஸ்புக்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச அளவில் வலைத்தளங்களின் தரவரிசைப்பட்டியலை வழங்கி வரும் அலெக்ஸா நிறுவனத்தின் பட்டியலில், கூகுளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.

கணினி யுகத்தின் ஜாம்பவான் என கருதப்படும் கூகுள் நிறுவனம்தான் இதுவரை தரவரிசை பட்டிலில் முதல் இடத்தில் இருந்து வந்தது. முதன் முறையாக கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு, தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் கொடி நாட்டி இருக்கிறது ஃபேஸ்புக்.

இது திகைக்க வைக்கும் சாதனை. எந்த ஒரு தகவலையும் தேட வேண்டும் என்றாலும், கூகுளை திறக்காமல் சாத்தியம் இல்லை என்ற ஒரு நிலை இருப்பதனால் கூகுள் தரவரிசை பட்டியலில் முதலில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

ஆனால் சில காலங்களாக அனைவரையும் ஆக்கிரமித்து வரும் ஃபேஸ்புக், தரவரிசைப்பட்டியலில் முதலிடம் வகித்துள்ளது.

பல லட்சக் கணக்கான மக்களால் தினம் தினம் ஆயிரக்கணக்கான் வலைத்தங்கள் இணையத்தளத்தில் தேடப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்த வலைத்தளம் அதிகமான பேரால் தேடப்படுகிறது என்பது பற்றிய தரவரிசை பட்டியலை பிரித்து காட்டும் நிறுவனம் அலெக்ஸா.

இதில் முதல் 10 இடத்தில் இருக்கும் வலைத்தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம். முதலிடத்தில் ஃபேஸ்புக், இரண்டாவது இடத்தில் கூகுள், மூன்றாவது இடத்தில் யூடியூப், நான்காவது யாஹூ மற்றும் ஐந்தாவது இடத்தில் பெய்டூ.காம்
இதை தொடர்ந்து ஆறாவது இடத்தில் விக்கிப்பீடியா, ஏழாமிடத்தில் விண்டோஸ் லைவ் இருக்கிறது.

சமூக வலைத்தளமான ட்விட்டர் எட்டாமிடத்தில் உள்ளது. கியூகியூ.காம் ஒன்பதாம் இடத்திலும் மற்றும் அமேசான்.காம் பத்தாமிடத்திலும் உள்ளன. இது தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் வருகை தருவோருக்கான கூடுதல் தகவல்கள். (மூலம் தட்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .