2024 நவம்பர் 02, சனிக்கிழமை

சீன விண்வெளி ஆய்வாளர்கள் பூமிக்குத் திரும்பினர்

Super User   / 2012 ஜூன் 29 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


விண்வெளிக்குச் சென்ற சீன விண்வெளி வீரவீராங்கனைகள் குழு 13 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தபின் இன்று வெள்ளிக்கிழமை பூமிக்குத் திரும்பியுள்ளது.

மொங்கோலியா பகுதியில், உள்ளூர் நேரப்படி காi 10.05மணியளவில் தரையிறங்கியதாக சீன அரச தொலைக்காட்சி அறிவித்தது. பரசூட் உதவியுடன் இக்குழுவினர் தரையிறங்கினர்.

சீனாவின் முதலாவது விண்வெளி வீராங்கனையும் இக்குழுவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இக்குழுவினர், விண்வெளியிலுள்ள தியான்கோங்-1 எனும் சீனாவின் ஆய்வுகூட கலத்திற்குள்ளும் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.  இப்பயணம் பூரண வெற்றியளித்துள்ளதாக சீனப் பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் விண்வெளியில் பிரத்தியேக ஆய்வுகூடமொன்றை நிர்மாணித்து முடிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .