2024 நவம்பர் 02, சனிக்கிழமை

ஸிப்பை திற, கூகிள் தகவல் வரும்

Super User   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிகப்பெரிய இணைய தேடல் இயந்திர தளமான கூகிள், விசேட தினங்களை குறிக்கும் வகையில் தனது பெயரை வித்தியாசமான படங்களுடன், தோற்றங்களுடன் மாற்றியமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கூகிள் டூடுல் என இது அழைக்கப்படுகிறது.

இன்று ஏப்ரல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூகிள் தனது கூகிள் டூடுலாக ஸிப் ஒன்றை வடிவமைத்துள்ளது.
கூகிள் பாவனையாளர்கள் அந்த ஸிப்பை திறந்து மூடவும் முடியும்.

இப்போது மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் ஸிப் பை கண்டுபிடித்த கிடியொன் சன்ட்பெக்கின் 132 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக இந்த கூகிள் டூடுல் வடிமைக்கப்பட்டுள்ளது.

1880 ஏப்ரல் 24 ஆம் திகதி சுவீடனில் பிறந்த பொறியியாளரான கிடியொன் சன்ட்பெக், 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். நவீன ஸிப் களுக்கு அடிப்படையாக அமைந்த ஸிப் பொறிமுறையை அவர் 1914 ஆம் ஆண்டு வடிவமைத்தார். 1917 ஆம் ஆண்டு அதற்கான காப்புரிமையை அவர் பெற்றார்.

போர்க்காலங்களில்  இராணுவத்தினர் அவசரமாக ஆடை அணிந்துகொள்வதற்கு ஸிப் மிகவும் பயன்பட்டது. இதனால் உலகெங்கும் ஸிப் பாவனை அதிகரித்தது.

தற்போது ஆடைகள், பைகள், கூடாரங்கள் என்பனவற்றில்  அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக ஸிப் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .