2024 நவம்பர் 02, சனிக்கிழமை

பறக்கும் கார்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 04 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


போக்குவரத்து நெருக்கடியான வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்களின் அனுபவங்கள் சொல்லில் அடங்காது. போக்குவரத்து சிக்கலில் அகப்பட்டு அசைய முடியாது அன்றாடம் தவிப்பவர்கள் எத்தனைபேர்.

அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்க ஓர் அமெரிக்க நிறுவனம் தனது முயற்சிகளில் இறங்கி பறக்கும் கார் மாதிரியை உருவாக்கி, அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் கண்டுள்ளது.

அமெரிக்காவின் மெஸ்ஸசூசெட்ஸை சேர்ந்த டெராபூஜியா என்ற நிறுவனம் முன்மாதிரியான 'உருமாறும்' கார் விமானத்தை வெற்றிகரமாக வீதியிலும் வானிலும் ஓடவிட்டும் பறக்கவிட்டும் தமது பரீட்சார்த்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இன்னும் ஒருவருட காலத்திற்குள் இவ்வாகனங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிடும் எனவும் இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இரண்டு இருக்கைகள் கொண்ட இக்கார் விமானம் பியட் 500 ரக காருக்குரிய வடிவத்தையும் அம்சங்களுடன் மடக்க கூடிய இறக்கைகளையும் கொண்டுள்ளது. விற்பனைக்கு முன்னரான 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலுத்தி 100 பேர் முன் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இக்கார் விமானம் விற்பனைக்கு வரும்போது 279,000 அமெரிக்க டொலர்களாக இருக்குமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. என்னும் சில நாட்களில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள வாகன கண்காட்சியில் இந்த பற்கும் காரும் பங்குபற்றுகிறது. அதன் பிறகு இக்கார் விமானத்திற்குரிய கேள்வி அதிகரிக்குமென நம்புவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பொருட்கள் மற்றும் கணினி உதவி பெற்ற வடிவமைப்பு என்பன இலகுரக பறக்கும் கார்களை மலிவு விலையில் கிடைக்க வழி வகுத்துள்ளது.

இன்றிலிருந்து இன்னமும் 10 அல்லது 15 ஆண்டுகளில் சாதாரண மக்களும் இப்பறக்கும் கார்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்; என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் கார் ஆகாயத்தில் மணிக்கு 185 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பறக்கக் கூடியது. தரையில் மணிக்கு 112 கிலோமீற்றர் என்ற வேகத்தில் செல்லக் கூடியது. 87 லீற்றர் கொள்ளளவுள்ள எரிபொருள்தாங்கி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலம் பறப்பதற்கு 19 லீற்றர் பெற்றோல் தேவைப்படும். தரையில் செல்லும்போது ஒரு லீற்றர் பெற்றோருக்கு சுமார் 15 கிலோமீற்றர் பயணிக்கும். சாதாரண நிலையில் 2.3 மீற்றர் அகலமும், இறக்கைகள் விரிந்த நிலையில் 26 அடி அல்லது 8 மீற்றர் அகலமும் கொண்டது.

இக்கார் மேல் எழும்புவதற்கு 2500 அடி அல்லது 763 மீற்றர் ஓடு பாதை தேவைப்படும் எனவும் 787 கீ.மீ. தூரத்தை ஒரேநேரத்தில் கடக்கலாம். ஆனால், இவ்வாகனத்தை செலுத்த மோட்டர் காருக்குரிய அனுமதிப்பத்திரமும், விமானிக்குரிய அனுமதிப்பத்திரமும் அவசியமாகும்.

இவ்வகை வாகன உற்பத்தியில் கலிபோர்னியாவை சேர்ந்த மோல்லர் நிறுவனமும், டக்சு நிறுவனமொன்றும் ஈடுபட்டுள்ளன.

முக்கியகுறிப்பு: இக்காரினால் நினைத்தவுடன் மேல் எழமுடியாது. கிட்டத்தட்ட முக்கால் கீ.மீ. ஓடுபாதையில் ஓடவேண்டும். அப்படியானால் ஒரு கிலோமீற்றருக்கு முன்னரே சாரதி முன்னால் உள்ள போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ளவேண்டும்.

எமதுநாட்டில் இது சாத்தியப்படுமா..???



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .