Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Super User / 2012 ஏப்ரல் 01 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பிரபலமான சமூக இணையத்தளமான பேஸ்புக், தேடல் பொறியின் (சேர்ச் இன்ஜின்) பக்கம் தன் பார்வையைச் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இவ்வாறான செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், தற்போது வெளியாகியுள்ள செய்தி அதிகபட்ச நம்பகத் தன்மையைக் கொண்டுள்ளது.
வெளியாகியுள்ள செய்தியின்படி, பேஸ்புக் நிறுவனம் 24 அல்லது 25 பொறியிலாளர்களை தேடல் பொறி சம்பந்தமான ஆய்வுகளுக்கு நியமித்து தேடுதலை எவ்வாறு மேம்படுத்தலாம் என ஆராய்ந்து வருகிறது.
அத்தோடு வெளியாகும் செய்திகளுக்கு மேலும் ஆதாரம் செய்வது போன்று பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஷக்கர்பேர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமொன்றில் பேஸ்புக்கின் தேடுதல் பெட்டி வழமையான அளவை விட பெரிதானதாகக் காணப்படுகிறது. ஆகவே இது புதிதான மேம்படுத்தப்பட்ட தேடல் பொறி சம்பந்தமானதாகக் காணப்படலாம் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே பேஸ்புக்கில் காணப்படும் தேடல் பொறியில் ஏதாவது விடயங்களைத் தேடினால் அங்கும் பேஸ்புக் தவிர்ந்த ஏனைய இணையத்தளங்களுக்குரிய முடிவுகளும் காட்டப்படுகின்ற போதிலும், அது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட திறனுடையே செயற்படுகிறது.பேஸ்புக்கின் இந்தத் தேடுதற் தொழிநுட்பத்துக்கு இப்போது வரை மைக்ரோசொப்ற் இன் "பிங்" தேடுதற்பொறி உதவி வருகிறது.
தேடல் பொறியான கூகிள் நிறுவனம் சமூக இணையத்தளப் பக்கம் தனது பார்வையை ஏற்கனவே வைத்து கூகிள் பஸ், கூகிள் வேவ், கூகிள் பிளஸ் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், சமூக இணையத்தள ஜாம்பவானான பேஸ்புக் தனது பார்வையை தேடுதற் பொறிகளின் பக்கம் செலுத்துகிறது. (க்ரிஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago