2024 நவம்பர் 02, சனிக்கிழமை

அமெரிக்க செய்மதி பூமியில் வீழ்ந்தது; சரியான இடம் தெரியவில்லை : நாசா

Super User   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் காலாவதியான 6 தொன் எடையுள்ள UARS  எனும் செய்மதி இன்று சனிக்கிழமை பூமியில் விழுந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. எனினும் இந்த இடத்தில் விழுந்தது என உறுதியாகத் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கிழக்குப் பிராந்திய நேரப்படி வெள்ளி இரவு 11.45 இற்கும் சனிக்கிழமை அதிகாலை 12.45 மணிக்கும் இடையில் (இலங்கை நேரப்படி சனி காலை 9.15 இற்கும் 10.15 மணிக்கும் இடையில் ) இச்செய்மதி பூமியில் விழும் என நாசா எதிர்வு கூறியிருந்தது.

சராசரி பஸ் அளவிலான இச்செய்மதி, 35 அடி நீளமானதாகும். இச்செய்மதியின் தலா 500 கிலோகிராம் எடையுள்ள சுமார் 26 பாகங்கள் பூமியில் விழும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் நாசா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அச்செய்மதி பூமியில்விழுந்து விட்டபோதிலும் சரியான இடத்தை அறிவதற்காக காத்திருப்பதாக நாசா இன்று சனிக்கிழமைதெரிவித்துள்ளது.

1979 ஆம் ஆண்டில், 75 தொன் எடையுள்ள ஸ்கைலாப் விண்வெளி நிலையமும் பேகஸஸ்-2 எனும் செய்மதியும் பூமியில் விழுந்தபின்  விண்வெளியிலிருந்து கட்டுப்பாடின்றி பூமியில் விழும் மிகப்பெரிய பொருள் UARS செய்மதியாகும். 2001 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் பூமியில் விழுந்தது. எனினும் கட்டுப்பாட்டுடன் இறக்கப்பட்ட அந்நிலையம் பசுபிக் சமுத்திரத்தில் விழுத்தப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 24 September 2011 09:05 PM

    இந்த செய்மதி யார் தலையிலும் விழாது என்று கூறப்பட்டதே! தரையில் விழுந்தும் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என்றால் புதினம் தான்!

    Reply : 0       0

    Mohammed Hiraz Saturday, 24 September 2011 09:55 PM

    ஓஹ்ஹ்... அறிவியல் இன்னும் எவ்வளவோ தூரம் வளரவேண்டி இருக்கிறது என்பது விழுந்த இடத்தை கூட அறியாமல் இருப்பதில் இருந்து விளங்குகிறது மேலும் உலகம் இன்னும் இருபத்தி நாலு மணித்தயாலமும் யாருடைய கமராவுக்குள்ளும் முழுமையாக இன்னும் அடங்கவிலை என்பதும் உலகை முழுக்க முழுக்க அறிவியல் மூலம் கண்கானிக்கும் அளவுக்கு இன்னும் தொழில் நுட்பம் வளரவில்லை என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.

    Reply : 0       0

    manithan Sunday, 25 September 2011 12:37 AM

    தான் அனுப்பிய செய்மதி யார் தலையில் விழுந்தாலும் நாசாவுக்குக் கவலையில்லை. கேவலம், பொறுப்பற்ற விதமாகக் கூறுகிறது எங்கே விழுந்ததென்று தெரியவில்லையாம். ருசியச் செய்மதி கட்டுப்பாட்டுடன் வீழ்த்தப்பட்டது நன்று. நாசாவின் செய்தி கவலை தருகிறது. எதிர்காலத்தில் இன்னொன்றை, வேண்டுமென்றே யார் தலையிலாவது வீழ்த்திவிட்டு அது கட்டுப்பாடின்றி விழுந்ததென்று கூறவும் கூடும்.

    Reply : 0       0

    ஓட்டமாவடி ஜெமீல் Sunday, 25 September 2011 01:11 PM

    நாசாவால் உலகத்திற்கு நாசம்தானோ? நாசாவை விட “மிர்“ எவ்வளவோ மேல்.

    Reply : 0       0

    riyas Sunday, 25 September 2011 02:47 PM

    செய்மதி மட்டும் அல்ல, இன்னும் அமெரிக்காவின் எல்லாமே விழ தான் போகிறது.

    Reply : 0       0

    AbdurRahman Sunday, 09 October 2011 07:23 PM

    தன்னை விட அறிவுடன் யாரும் இல்லை எனக் கூறும் நாசாவுக்கு, அனுப்பிய செய்மதியை எப்படி டிஸ்போஸ் பன்ரண்டு தெரியாமல் இருக்கு. பட் அதை பயன்படுத்தி அப்பாவி நாடுகளை ஃ மனிசர்களை எப்படி அழிக்கிறது என்பது நன்றாக தெரியும். ஹ! ஹா! .நம்பாதீர்கள்

    Reply : 0       0

    PUTTALAM MANITHAN Saturday, 26 November 2011 12:23 AM

    ஒரு வேலை ஈரானில் விழுந்து இருக்கும் என்று அங்கு போய் தேடப்போகிறார்கள். எப்படியோ ஈரானுக்குள் நுழைய வேண்டுமே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .