2024 நவம்பர் 02, சனிக்கிழமை

சூரிய சக்தியில் இயங்கும் மடிகணினி

A.P.Mathan   / 2011 ஜூன் 22 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணினி என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்ட இன்றைய சூழலில் மின்சாரம் மட்டும் அரிதாகிக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக மடிகணினி (LapTop) பாவிப்பவர்கள் குறிப்பிட்டளவு நேரத்திற்கே அதனை பயன்படுத்த முடிவதால் அடிக்கடி மின்சார இணைப்பை தேடிச் செல்ல நேரிடுகிறது. இதனை நிவர்த்திக்கும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் மடிகணினிகளை சம்சுங் (Sumsung) நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Sumsung NC215S என்னும் புதியவகை மடிகணினிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் சந்தைக்கு வரவிருக்கிறது. 2 மணித்தியாலங்கள் சூரிய ஒளியில் இந்த மடிகணினிகளை வைத்திருந்தார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு இக்கணினிகள் இயங்கும் என கருதுகிறார்கள். இதனடிப்படையில் இந்த சூரியசக்தியில் இயங்கும் மடிகணினிகள் நாளொன்றுக்கு சராசரியாக 14 மணித்தியாலங்கள் இயங்கக்கூடியது என கண்டுபிடிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த சூரியசக்தி மடிகணினிகள் விற்பனைக்கு வரவிருக்கின்றன. ரஷ்யாவில் 500 அமெரிக்க டொலர்களுக்கும் (சுமார் 58,000 ரூபாய்) அமெரிக்காவில் 300 அமெரிக்க டொலர்களுக்கும் (சுமார் 48,000 ரூபாய்) விற்பனை செய்யப்படவுள்ளதாக சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மடிகணினிகளை காரியாலய பாவனைகளுக்காக நாங்கள் தயாரிக்கவில்லை. கல்லூரி மாணவர்களின் மத்தியில் மடிகணினி பாவனையினை அதிகரிக்கும் நோக்கிலேயே இதனை கண்டுபிடித்திருக்கிறோம். கல்லூரி மாணவர்கள் அதிகமாக வெளியிடங்களிலேயே இருப்பார்கள். அவர்களின் தேவைக்கு இந்த 14 மணித்தியாலங்கள் தாராளமாக போதுமென நாங்கள் கருதுகிறோம். எதிர்காலத்தில் சூரியசக்தியில் இயங்கும் இதுபோன்ற அதிகளவான மடிகணினிகளை உலகளாவிய ரீதியில் விற்பனைக்கு விடவும் சம்சுங் நிறுவனம் தயாராகி வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.


 


You May Also Like

  Comments - 0

  • siraj siro maligaikadu Monday, 18 July 2011 04:25 PM

    gud idea

    Reply : 0       0

    sirajmohamed Friday, 16 September 2011 12:52 AM

    யா குட்.

    Reply : 0       0

    fowkey Tuesday, 10 January 2012 02:49 PM

    சிறந்த முயற்சி. இதில் சந்தோசப்படுவது என் நண்பன்தான்

    Reply : 0       0

    fowkey Tuesday, 10 January 2012 02:50 PM

    வெரி குட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .