Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஜூன் 13 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளுக்கு நாள் சனத்தொகை அதிகரித்து வருவதோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணமே இருக்கிறது. வாகன அதிகரிப்பினால் போக்குவரத்து சிக்கல்களை சகிக்கமுடியாமல் திண்டாடுகின்ற மக்களை தினமும் நாம் அவதானிக்கிறோம். இதில் நாங்களும் உள்ளடக்கம்தான்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடுவதில் உலகம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு திரிவதென்னமோ உண்மைதான். ஷாங் யுஹான் என்னும் 21 வயதுடைய பெண்ணெருவர் இதற்கான தீர்வொன்றை உருவாக்கியிருக்கிறார்.
நீர்நிலைகள், தெருக்கள், பாலைவனப் பகுதி மற்றும் பனிப்பிரதேசங்களில் செல்லக்கூடிய 'வோல்க்ஸ்வகென் அகியுவா' (Volkswagen Aqua) என்னும் ஒரே வாகனத்தின் மாதிரியினை ஷாங் யுஹான் உருவாக்கியிருக்கிறார்.
'ஹூவர்கிறாப்' என்னும் காற்றலையில் இயங்கும் படகுபோன்ற வடிவமைப்பில் இந்த காரினையும் உருவாக்கியிருக்கிறார். இது ஐதரசன் எரிபொருளில் இயங்கக் கூடியது. ஆகையினார் புகை வராது. மாறாக நீர்தான் வெளியேறும். இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒன்று ஹூவர் பகுதியை இயக்குவதற்கு பயன்படும். மற்றையது வாகனத்தினை சீர்மைப்படுத்த பயன்படும் என்பது சிறப்பம்சமாகும். இந்த கார் மணிக்கு 103 கிலோமீற்றர் என்ற வேகத்தில் செல்லக்கூடியது.
ஜேர்மனில் இருக்கின்ற கார் தயாரிப்பு நிறுவனம் இந்த 'வோல்க்ஸ்வகென் அகியுவா' காரின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. 'இந்த பல்லூடக கார் எதிர்கால சந்ததியினருக்கு வரப்பிரசாதமாக இருப்பதோடு இதனைப்போன்று வசதிகள் எந்த வாகனத்திலும் இருக்காது' என கண்டுபிடிப்பாளர் ஷாங் யுஹான் தெரிவித்துள்ளார்.
சீனாவின் எக்ஸ்ஹுவா பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவியின் இக்கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் சாதாரண மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமாக இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago